பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 47

என ஆற்றுப்படுக்கு முகத்தான்் ஆயின் கைம்மாறு கருதாத மாரியனைய வரையா வள்ளன்மையை வியந்து கூறினர்.

இங்ங்னமாகப் புலவரது உள்ளத்தை ஆயின் கற் குண நற்செயல்கள் இறுகப் பிணித்துவிட்டமையான், அவனே விட்டகலாமல், அவனது படை மடம் !-'தி வீரத்தையும், கொடை மடம் பட்ட தண்ணளியையும், ஏனைய இன்குனங்களையும் தமது வாய்மை மிக்க துய் மை மொழியாற் பல படப் புகழ்ந்து போற்றி, ஆய் குடிக்கண் பன்னுள் வாழ்ந்திருந்தனர்.

ஆய், தன்னகத்து வரும் புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு யானே, குதிரை, தேர் முதலியவற்றை யும், ஏனேய வாரியனேய செல்வங்களையும் ஓயாது வாரி வாரி அளித்து வந்தான்். கொடை மடம் பூண்டு அவன் இங்ஙனம் கொடுத்து வந்தமையால், அவனது குன்ற னைய செல்வங்கள் சிறிது சிறிதாய்க் குன்றத் தலைப்பட் டன. வறுமைக் கடல் அவனே வளைப்பதற்கு அற்றம் நோக்கி கின்றது. அக்காலத்தும் அவன் கொடைக் கடம் பூண்ட தன் கிலேயிற்றளராது, தன்னகத்து எஞ்சியிருந் தவற்றையும் விஞ்சிய உவகையோடு அளித்து வந்தான்். இவ்வாறு எல்லாவற்றையும் இரப்போர்க்கீந்து செல் வம் ஒன்றுமில்லாதொழியவே, தன் மனேவியருடைய அணிகலன்களுள் மங்கிலிய சூத்திரம் ஒழிய, ஏனைய அணிகலன்கள் அனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிட் டுப் பொருட்செல்வம் நீங்கிப் புகழ்ச் செல்வமோங்கித் தன் கிலேயிற்ருழாது நின்ருன். ஆய் நிழலில்லாத நீண்ட அருஞ்சுரத்து நிழல்மிக்க தனிமரம் போலகின்று, தன்னை அடைந்த அறிஞர், மடவர், வலியர், மெலியர் யாவர்க் கும் இன்னருள் சுரந்து ஈந்து, முடியுடையவேந்தர் மூவரி