பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நல்லிசைப் புலவர்கள்

னும் பன்மடங்கு புகழ்விளைத்துப் பின்னர் வறுமையுற்ற காலத்தும், மோசியார், செல்வக் காலே சேர்ந்து அல்லத் காலே அகன்றுவிடும்புல்லியர் போலாது,அவனே விட்டக லாமல் உடன் உறைந்து, அவனது இன்பினும் துன்பி னும் பங்கு பெற்றிருந்தவர், முன்னர்ப் பெருஞ்செல்வத் தோடு பொவிந்து விளங்கிய ஆய் அரண்மனை பின்னர் அவையின்றித் தோன்றுவதைக் கண்ட பிறர் பலவாறு கருதுவதை அறிந்து, அவர்கட்கு, "ஆயது அரண்மனை பொருள் ஒன்றுமின்றி வறுமையை அடைந்ததேனும், ஒப்புரவால் வந்த அஃது, ஒப்பரிய செல்வமேயன்றி வறு மையன்று." என்ற உண்மையை அறிவிக்கக் கருதி, 'களாப்பழம் போலும் கோட்டையுடைய யாழைக் கொண்டு பாடும் பாட்டை வல்ல பானர் பரிசில் பெற் றுக்கொண்டு போனதாக, களிறுகள் இல்லையாகிப் பொலிவழிந்த கட்டுத்தறியின்கண்ணே காட்டு மயில் கள் தத்தம் இனத்தோடுதங்க,கொடுத்தற்கரியமங்கிலிய சூத்திரமன்றிப் பிறிதோரணிகலமுமில்லாத மகளிரு டனே பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுவார்கள், ஆயுடைய கோயிலே , இனிய தாளிப்பையுடைய அடி சிலப் பிறர்க்கு உதவவின்றித் தம்முடைய வயிற்றையே கிறைத்துச் சிறந்த புகழை நீங்கிய பெருஞ்செல்வத்தை யுடைய அரசர் கோயில் இந்த ஆய்கோயிலைக் சிறிதும் ஒவ்வாது,' என்னும் பொருளமைய,

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளில் கான மஞ்ஞை கணனுெடு சேப்ப ஈகை யரிய இழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில்