பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 49

சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உாைகா லோங்குபுகழ் ஒரீஇய முாைசுகெழு செல்வர் நகர்போ லாதே." என்ற பாடலைத் தம் செக்காவினின்றும் வெளிப்படுத்தி னர். இவ்வமயத்து ஆய், தனது வறுமையாகிய அளவு கோலால் புலவரது கண்பு முதிர்ந்த அகத்தின் அகற். சியை டேட்டி அளந்து, வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டான். இங்ஙனம் புலவரும் வள்ளலும் பன்னுள் கெழுதகைமை மிக்க உள்ளத்தராய் ஒழுகி வந்தனர்.

இவ்வாறு இவர்கள் ஒழுகி வரும் நாளில், தனது மேருவனேய செல்வங்களேயெல்லாம் கற்பகத்தாரு போல வழங்கிப் பின்னர்ப் பிறர்க்கு கல்கத் தனது புண்ணியம் பழுத்தொளிரும் பொன்னுடம்பன்றிவேருென்றுமின்றி. கின்ற வள்ளியோனது வாழ்நாள் உலந்தமையால், ஒரு காள் காலன் என்னும் கண்ணிலி வந்து அவனேக் கவர்ந்து கொண்டான். மண்ணினர் கண் மாரி பொழிந்து மயங். கினர் இரவலர் இரங்கிக் கலுழ்ந்தனர். இவர்கள் இங்ங்னம் ஆயின், ஆயின் உழுவலன்புக்குரிய மோசியா ரடைந்த மன மறுக்கத்தை அளந்துரைப்பதெங்ஙனம் ! புலவர் பலவாறு புலம்பி, அலமந்தார். ஆயை முறைப் படி கொணர்ந்து, ஈமத்தேற்றி, எரி கொளுவினர். அவன் மனைவியர், கொழுநனுடன் துறக்கம் புகுதற்குத் தீப்பாய்ந்து உயிர் நீத்தனர். அவ்வளவில் ஆகாயத்தில் பெருமுழக்கமொன்று கேட்டது. அதன் உண்மையை அறிந்த புலவர், திண்ணிய தேர்கள் பலவற்றை இரப்போர்க்கீந்த குளிர்ந்த பூ மாலையையுடைய ஆய் வருகின்ருனென்று கருதி, தொடியினையும் வச்சிராயுதத் தையுமுடைய கையையுடைய இந்திரனது கோயிலி