பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்லிசைப் புலவர்கள்

டொழுகுதற்கேற்ற உலகியலறிவும், அரசியலறிவும் சாலப்படைத்தவரென்பதும் விளங்கும். சேரல், புலவர் கூறியதை உண்மையெனத் தேறி, வெகுளி நீங்கின னென்றால், இவர்பால் அரசர்கட்கிருந்த பெருமதிப்பு இனத்தென மதிக்குத்தரத்ததோ! சோழனுக்கு அவன் பகைவனகிய அந்துவஞ்சேரலாலும், ஊர்ந்து வந்த மத யானையாலும் இடையூறு ஒன்றும் நிகழ்ந்துவிடாது இனிது செல்வாகை எனத் தம் பழைய கண்பனும், சேரனுக்குப் பகைவனுமாகிய சோழனைச் சேரனிடத் திருந்துகொண்டே வாழ்த்திய வாழ்த்துரையில்ை, புல வர், பேரருள், நடுவு கிலேமை, நன்றியறிதல், உண்மை நெறியில் அரசர்க்கு அஞ்சாமை முதலிய குணப் பெரு மைகளைத் தமக்கே உரிமையாக்கிக்கொண்ட சான்ருேர் என்பது நன்கு தேறப்படுகின்றது. தாம் பழகிய அரசர் யாவரினும் விழுமிய குணமுடையவன் ஆய் என்பதனை அவனேக் கண்டு அறிந்த பின்னர், தாம் முன்பு சிறிய புகழையும் குணத்தையுமுடைய அரசரைப்பாடியதற்கு வருந்தித் தம்மையே வெறுத்துக் கூறி, ஆய் என்னும், வள்ளலுடைய குணங்களில் ஈடுபட்டுத் தமது அரிய பாடல்களேயெல்லாம் அவனுக்கே உரிமை செய்ததி விருந்து புலவர் பரிசில் கருதி எவரையும் இல்லது புனேந்து தம் காக்கொண்டு பாடத் துணியாத தூய்மை மிக்க வாய்மையாளர் என்பதும், உத்தமர் கூட்டுறவில் விருப்பும் உவப்புமுடையவர் என்பதும் பெறப்படும்.

ஆயுடன் நட்புப் பூண்டு அவனது வரம்பற்ற செல் வத்தின் பயனே நன்கு நுகர்ந்திருந்த புலவர், அவன் வறுமை மிக்க காலத்தும் அகலாது, அத்துன்பத்தை அவன் இறக்கும் வரை உடனிருந்தனுபவித்து, ஆயின் வள்ளன்மையை உள்ளன்பு கனியப் புகழ்ந்து பாடிய