பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 5器

குத்திரத்தில், பேராசிரியர் ஊரும் என்பதற்குப் 'பிறந்த ஊரும்’ எனப் பொருள் கண்டு, உறையூர் ஏணிச்சேரியை மோசியார் பிறந்த ஊராகக் கொள்ளும் வண்ணம் காட்டியுள்ளார்: அங்ஙனமாயின், பல புலவர் களுக்கு அவர்தம் இயற்பெயருடன் புணர்த்துக் கூறப் படும் மோசி' என்பது ஒரு குடியின் பெயராகவேனும் மற்றெது பற்றியேனும் வழங்கியதாகல் வேண்டும். இதன் உண்மை காணும் வரை மேற்காட்டிய கொள் கையை மேற்கொள்வது தவறுடையதாகாது. இவர் பழகிய இடங்கள் உறையூர், கருவூர், ஆய் குடி, பொதிய மலை முதலியனவாம்.

பெருமை : புறநானூற்றில் காணப்படும் இவ ருடைய பாடல்களே இவரது பெருமை இனத்தெனப் புலப்படுத்தற்குப் போதுமானவை. இவர் முடவரே எனினும், சேர சோழ பாண்டிநாடு எனும் தமிழ் காடு முழுதுஞ் சஞ்சரித்த உலேயா முயற்சித் திறம் பெற்ற உரனுடையாளர் : அம்மூன்று காட்டினும் தம் பெயர் கிறுவிய தகைமையாளர்.சோழன் கோப்பெருகற்கிள்ளி, கருவூர்ப் புறத்துக் களிறுசர்ந்து வரச் சேரமான் அவன் வரும் காரணம் அறியாது அதனையறியப் புலவரை வின விய காலத்து, இவர் அவ்வுண்மையை உடனே அறிந்து, அரசனுக்கறிவித்து, அவனது மாறுபாட்டையும் ஐயத் தையும் மாற்றினர் என்பதறிய, இவரது காலதேசவியல் புகள் கடந்த பொருள்களேயெல்லாம் அறியும் கூரிய மதி வன்மை அளத்தற்கரியதென்பது உணரப்படும். இவ்வர லாற்ருலே இவர் செந்தமிழ்ப் புலமை செய்விதின் வாய்க் கப் பெற்றவரேயன்றி, அரசர்க்கு அமைச்சுரிமை பூண்

1. இதனே, அகநானூறு, கற்றிணை இவற்றின் பதிப் பாசிரியர்கள், ஊரெனவே கொண்டார்கள்.