பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2 நல்லிசைப் புலவர்கள்

ஏனய சான்று கொண்டேனும், இவர் இன்ன கொள் கையினரென முடிவாகக் கூறுதற்கு இடனென்று மில்லை. இவர், இம்மை அறத்தால் மறுமைப்பயன் நுகர் தலையும், மறுபிறப்பு உண்டென்பதையும் நம்பியவரென் பதை இவர் பாடல் உணர்த்துவதால், பொதுவாக மறை நெறிப்பட்ட கொள்கையினர் என்பது மாத்திரம் அறியப்படும். இந்திரன் என்னும் தெய்வப் பெயர் இவர் வாக்கில் பயின்றுள்ளது (புறம்-241). இவர் நண்பனுகிய ஆய், சிவபெருமான்மீது பத்தி மிக்கவன் என்பது, சிறுபாளுற்றுப்படையால் அறியப்படு கின்றது.

ஊர் : மோசி குடி எனும் யெபரிய ஊர் ஒன்றும் மோசிப்பட்டி எனும் பெயரிய ஊர் ஒன்றும் பாண்டி மண்டலத்தில் சேது.காட்டின் பகுதியில் மதுரை நகர்க் குக் கிழக்குத் திசையில் 5 காத தூரத்தில் அடுத்தடுத் துள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியில் வாழ்க் திருந்த ஆயுடன் கட்புப் பூண்டு நெடுநாள் அவனுடன் உறைந்திருந்த புலவரது ஊர் பாண்டி காட்டகத்ததென் பதே பொருத்தமாகத் தோற்றுகின்றபடியால், பாண்டி நாட்டிலுள்ள இவ்வூரே இவரது பிறப்பிடமாக ஊகித் துக்கொள்ளப்பட்டது. இவ்வூர் பல கல்விசைப் புலவர் 56 தோன்றுதற்கு கிலேக்களய்ை இருந்ததென்பது முன்னரே காட்டப்பட்டது. பழைய புலவர்களுள் சிலர் ஊர்களாக அறியப்படும் படுமாற்றுார், ஒக் கூர், மாங்குடி முதலிய ஊர்களும் இவ்வூர்க்குச் சிறிது சிறிது தூரத்துள் அமைந்துள்ளமை ஈண்டு அறியத் தக் கது. ஊரும் பேரும்” என்ற தொல்காப்பிய மரபியற்

1. சிறுபாண். அடி, 95-99.