பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 5i

வேண்டும். இவர் பெயர் மோசியார்’ எனவும் மோசி’ எனவும் குறைத்தும் வழங்கப்பெறும். உறையூர் ஏணிச் சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு, மோசியார் என் பதை இவரது இயற்பெயரென்னலாமோ? எனின், மோசி கொற்றஞர், மோசி சாத்தனர், மோசி கீரனர், மோசி கண்ணத்தனர் என்ற பழைய புலவர் பெயர் வழக்கில் இப்பெயர் இயற்பெயரின் வேருகக் கொண்டு வழங்கப்பெறுதலால், இதனை இயற்பெயரென்னுது இடப்பெயரென்பதே பொருந்துவதாகும், மோசி என் பது மோசி குடி என்ற பெயரின் சுருக்கம்.

குலம் : இவர் பிறந்த குலம் அந்தணர் குலமென் பது, தொல்காப்பிய மரபியல்?4-ஆம் சூத்திரவுரையில், 'உறையூர் ஏணிச்சேரி முடமோசி அந்தணர்க்குரியது,” எனப் பேராசிரியர் உரைத்திருப்பதால் அறியப்படுகின் றது. அங்ங்னம் அப்பெரியார் கூறுதற்கு அவர் காலத் துச் சிறந்த சான்று இருந்ததாதல் வேண்டுமென்பது துணிபு. மோசியார் ஆயைப் பாடிய 185-ஆம் புறப் பாட்டில் தம்மைப் பாணர் மரபினராகக் கருதும் வண் னம் கூறியிருத்தலால், இவர் பாணர் மரபினர் ஆகாரோ?' எனின், புலவர் முதலியோர் தம்மை அரசர் களால் பெரிதும் விரும்பப்படும் பாணர் கூத்தர் போல வைத்துக்கூறிச் செய்யுள் செய்தல் அக்காலத்து மரபாக லின், ஆகாரென்க. அங்ங்னமே சோழன் குளமுற்றத் துத் துஞ்சிய கிள்ளி வளவன், பண்ணனேப் பாடிய 178-ஆம் புறப்பாட்டில் தன்னைப் பாணகைக் கூறிக் கொள்வதையும், கபிலர் முதலிய புலவர் பெருமக்களும் தத்தம் புறப்பாடலுள் இங்ங்னமே கூறியிருத்தலையும் சண்டைக்கு கோக்கிக்கொள்க.

கொள்கை : இவருடைய பாடல்களிலிருந்தேனும்