பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓 நல்லிசைப் புலவர்கள்

இமயம்,” என இமய வரையின் இயற்கையைப் புலப் படுத்தியிருப்பது இயற்கைக்சுவை பயக்கின்றது. 8ே-ஆம் புறப்பாட்டில் ஊர் கடுமன்றத்திலுள்ள பலா மரத்தின் கிளைகளில் (ஆயிடம் பரிசில் பெற வந்தர் கூத்தர் முதலிய பரிசிலர் தூக்கி வைத்திருக்கும் மத்த ளங்களே அம்மரத்தில் வாழுங் குரங்குகள் பலாப் பழ மெனத் தட்டிப் பார்க்குமென்றும், அம்மரத்திலுறை யும் அன்னங்கள், தட்டுதலால் எழுந்த அவ்வோசைக்கு அஞ்சி, எழுந்து அதற்கு மாறுபட ஒலிக்குமென்றும் கூறியிருப்பவை முறையே நகைச் சுவை பயப்பதாயும் இயற்கை நவிற்சியாயுமுள்ளன. 184-ஆம் புறப்பாட் டடிகளான, இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலே வணிகன் ஆயலன்,' என்ற இத்தொடக்கத்துப் பகுதி மறவாது உளங்கொளற்குரியது. இதனே உளங்

கொளவே, ஆற்றுநர்க்களிப்போர்.அறவிலபகர்வோர்” என்ற மணிமேகலை அடி நினைவிற்கு வரும். புலவர் ஆயி டம் ஆற்றுப்படுக்கும் ஒரு விறலியை, வழியில் வருத்த மின்றி இனிதாய் விரைந்து செல்வாய்'என்பது தோன்ற, 'கின், விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி, எனக் கூறியிருப்பது பொருட்சுவை முதிர்ந்து நகைச் சுவையும் ஊட்டுகின் றது. இதில், கொண்டைமேற் காற்றடிக்க' என்னும் உலக வழக்கு அமைந்துள்ளது நோக்கத் தக்கது. இப் பகுதியோடு, 'அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும், மணிபுரை யெருத்தின் மஞ்ஞை போல கின், வீபெய் கூந்தல் வீசுவளி யுளர, ஏகுதி மடங்தை,” என்ற நற் றிணை 364-ஆம் பாட்டின் பகுதி சொல்லாலும் பொரு ஏாலும் ஒற்றுமையுற்று விளங்குவது ஈண்டு அறிந்து இன்புறற்பாலது. ஒப்புரவு ஆற்றியதால் வந்த வறுமை