பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?? நல்லிசைப் புலவர்கள்

,ே ஒரு புருவுக்காகத் துலாக்கோல் புகுந்து அதன் துன் பத்தைத் தீர்த்ததன்றியும் பிற உயிர்களுக்கு உற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்தருளிய சிபி என்னும் அரசர் பெருந்தகையின் மரபிலே உதித்தவன். இச் சிறுவர்களோ, அறிவால் உழுதுண்ணும் புலவரது வறு மையைக் கண்டால் வருந்தி, அதைத் தீர்ப்பதற்குத் தம் செல்வங்களைப் பகுத்துக் கொடுத்துண்னும் தண் னளியுடையவராய் வாழ்வாரது மரபிற்பிறந்தவர்கள். இவர்கள் இந்த யானையைக்கண்டு இயற்கையில் அஞ்சி அழுகின்ற அழுகையையும் மறந்து நிற்கும் பச்சிளங் குழந்தைகளாய் இருக்கின்றார்கள் அஃதன்றியும், இக் கூட்டத்தை அச்சத்துடன் பார்த்து, முன்பு தாங்கள் அறிந்திராததான் புதிய வருத்தத்தையுடையவர்களாயு மிருக்கிருர்கள்; நான் கூறிய இச்சொற்களே உள்ள படி கேட்டறிந்தனையாயின், இனி விரும்பியதைச் செய் வாயாக!' என்று இங்ங்னம் கல்லும் மரனும் கரைக்துரு கக் கூறினர். கூறவே, அரசன் புலவரது அருளுரை யைக் கேட்டுத் தன் கொடுஞ்செயலுக்கு காணி, குழந் தைகளைக் கொல்லாது விடுத்தனன்.

பின்னர்ப் புலவர், இங்ங்னம் தம் பொருளுரையால் தெருண்டு அருள் நிரம்பியவனை அவ்வரசன் திறத்தை வியந்து, கூற்றுவனும் தன்னல் உயிர் கொள்ளுதற் கேற்ற காலம் வருமளவும் எதிர்பார்த்திருப்பான் அவ் வாறு காலம் பாராது பகையரசர் மாளும்படி வேண் டிய இடத்தே கொல்லும் வெல்லும் போரையுடைய வேந்தே, எட்டுத் திக்கிலும் எரிகொள்ளி எரிந்து விழ வும், மரங்களின் கிளைகள் இலைகள் உதிர்ந்து வாடவும், சூரியன் பல இடங்களில் தோன்றவும், அஞ்சக் தக்க பறவைகள் குரலிசைப்பவும் இவற்றை கனவிற் கண்