பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோஆர் கிழார் 75

என்ற தொல்காப்பிய மரபியற்குத்திரத்தால் அறியப் படுவது. சில பிரதிகளில் இவரது பெயராகக் கோவூர் அழகளுர் எனவும் காணப்படுதலால், அழகனுர் . என்பது இவரது இயற்பெயராதலுங் கூடும்.

குலம் : இவர் தோன்றிய குலம் தமிழ்ப் பழங் குடிகளுள் ஒன்ருய வேளாண் குலம் என்பது, இவரது கிழார் என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுவது, கிழார் என்ற பெயர் வேளாளர்க்குரியதென்பது மேற் காட்டப்பட்டது.

கொள்கை : இவர் தம் பாடல்களில் கூறியிருக் கும் திேகளேயும் ஒழுகலாறுகளேயும் ஊன்றி கோக்கு பிடத்து இவர் தமிழ் காட்டுத் தொன்றுதொட்டே வழங்கி வந்த மறைநெறிப்பட்ட கொள்கையுடையா ரென்பது புலனுகின்றது.

ஊர் : இப்புலவர் சோழபரம்பரையிலுதித்த நான்கு அரசர்களால் அபிமானிக்கப்பட்டு, அவர்கள் அவைக்களங்களில் அமர்ந்து, அவ்வப்போது அவர்க்கு உறுதி பயப்பன கூறி, அவர்களைப் புகழ்ந்து பாடித் தம் வாழ்நாட்களையெல்லாம் சோழ நாட்டிலேயே கழித்தவ சென்று இவர் பாடிய பாடல்கள் கொண்டு அறியப்படு தலானும், சோழ நாட்டையும் காவிரி நதியையும் புனேக் துரைத்திருத்தலானும், இவரது பிறப்பிடமாகிய கோவூர் சோழ நாட்டைச் சேர்ந்ததென்பது துணிபு. இப்பெயருடைய ஊர் இக்காலத்துச் சோழநாட்டில் யாண்டுள்ளது என்பதனேக் கேட்டறிக.

பெருமை : இப்புலவரது ஆழ்ந்த கல்விப் பெரு மையினையும், சான்ற குணப் பெருமையினையும் இவர் இயற்றியனவாயுள்ள சீரிய பாட்டுக்களானே நன்கறிய லாகும். இவர் தமது பொருவிறந்த புலமைத் திறத்திற்