பக்கம்:நல்ல கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கண்ணனைப் பார்த்து சிரித்தவாறு வெளியே சென்றார். மாணவர்கள் ஆசிரியர் கூறிய அறிவுரையைப் பற்றியே பேசினர். தாமும் அவ்வாறு வாழப் போவதாக உறுதி எடுத்தனர்.

ஆசிரியர் கூறிய எதுவும் கண்ணன் மூளையில் ஏறவே இல்லை. வீட்டின் மூலையிலேதான் அவனது நினைவு மொய்த்துக் கொண்டேயிருந்தது.

மற்ற மாணவர்கள் கிளம்புவதற்கு முன்னரே, தனது புத்தகங்களை தாறுமாறாக அள்ளிப் பையிலே போட்டுக் கொண்டு, வகுப்பறையை விட்டு, வில்லிருந்து அம்பு புறப்படுவது போல் வெளியே வந்தான்.

நடையிலே வேகம். நினைவிலே தாகம். வாயிலே விசில் எழுப்பிய சினிமாப் பாடலின் ராகம். வழியெல்லாம் எப்படித்தான் நடந்தானோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/13&oldid=1081094" இலிருந்து மீள்விக்கப்பட்டது