பக்கம்:நல்ல கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


டாள். வேலைக்காரனோ காய்கறி வாங்கப் போய்விட்டான்' என்று தாய் சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

'சரி நானே இழுத்துத் தொலைக்கிறேன்' என்று முணுமுணுத்தவாறே, முதல் முறையாக வாளியை கிணற்றில் இறக்கித் தண்ணீர் மொண்டு இழுக்கத் தொடங்கினான்.

கைகள் எரிச்சல் கொள்ளத் தொடங்கின. என்றாலும் கஷ்டப்பட்டுக் கொண்டே, 'குளித்தேன், என்ற பெயருக்காகக் குளித்தான்.'

தன் அறைக்கு வந்து வேறு உடைகளை மாட்டிக் கொண்டு தயாராகிய பொழுது, மணி எட்டே முக்கால் ஆகிவிட்டது.

'அம்மா நேரமாகிவிட்டது. எனக்கு சாப்பாடு வேண்டாம். காபி மட்டும் போதும்' என்று கத்தினான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/45&oldid=1081147" இலிருந்து மீள்விக்கப்பட்டது