பக்கம்:நல்ல கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


'காபி ஆறிப் போனதால், வேலைக்காரி பர்வதம் குடித்து விட்டுப் போய்விட்டாள். சமையல் முடிய இன்னும் 10 நிமிடம் ஆகும். கொஞ்சம் பொறு' என்றாள் தாய்.

'காபியும் கிடையாதா? சரியம்மா! நான் போய் ஒட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று தனக்கு சமாதானம் கிடைப்பது போல சொல்லிக் கொண்டே, கார் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.

கார் இல்லை. பகீரென்றது மணிக்கு.

'காரைத்தான் அப்பா காலையிலே எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாரே' என்பது அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. நேர்முகத் தேர்வுக்கான முழுக்கால் சட்டைபோட்டு, முழுக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/47&oldid=1081149" இலிருந்து மீள்விக்கப்பட்டது