பக்கம்:நல்ல கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

70


அத்தனை சிறுவர்களும் அவன் சொல்லுக்கு மறு சொல் பேசமாட்டார்கள். சொன்னதைச் செய்வார்கள். அவன் தருவதை உண்பார்கள்.

அதில் சந்திரன் என்பவன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். சிங்காரத்தை அவனுக்குப் பிடிக்கும். ஆனால் அவனுடைய தலைக்கனமான பேச்சும், தாறுமாறான போக்கும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

தவறு செய்தால், நிச்சயம் தட்டிக் கேட்பான்.

தான் தவறுக்கு உள்ளானால், யாராவது தன்னை அடித்துவிட்டால் கூட, மீண்டும் அவரைத் திருப்பி அடிக்காத வரை அவன் உறங்கவே மாட்டான். யானை போல குணம் கொண்டவன் சிங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/73&oldid=1081379" இலிருந்து மீள்விக்கப்பட்டது