பக்கம்:நல்ல குழந்தை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

திருமண மண்டபத்தின் அழகையும் அங்கே நடந்த விசேஷங்களையும் ஒழுங்காகச் சொல்வதற்கு இப்புத்தகம் போதாது. அவ்விதமே திருமணப் பெண்ணின் அழகையும் என்னால் சொல்ல முடியாது.

திருமணப் பெண்ணைப் பார்த்தவர்கள், “ஆ! இப் பெண்ணின் அழகே அழகு,” என்றார்கள். திருமணப் பிள்ளையைப் பார்த்தவர்கள், “ஓ! இப் பிள்ளையின் அழகுக்குப் பெண்ணழகு எங்கே!” என்று ஆச்சரியப்பட்டார்கள். இருவரையும் ஒன்றாகப் பார்த்தவர்கள் ஒன்றும் தோன்றாமல் விழித்தார்கள்.

திருமண மண்டபத்தில், எள் விழு வதற்கும் இடம் இல்லாதபடி ஆண்களும் பெண்களும் நிறைந்து இருந்தார்-

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/36&oldid=1354658" இலிருந்து மீள்விக்கப்பட்டது