பக்கம்:நல்ல சேனாபதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நல்ல சேனாபதி



போரில்தான்.” "என்னிடம் போருக்கு வருவார் யாரும் இல்லையே! வலியச் சென்று ஒருவரோடு போரிடுவதும் அறமாகாது. வீரத்துக்குப் போக்கு இல்லையே என்பதை நானும் உணர்கிறேன். என் நாட்டு வீரர்கள் தோள் தினவுடன்தான் இருக்கிருர்கள். போர் நேர்ந்தால் அவர்களுடைய வீரம் புலப்படும்.”

பாண்டிய மன்னன் சிறிது பேசாமல் இருந்தான். 'உங்கள் வீரத்தை மற்றவர்களுக்குத் துணையாக நிற் பதில் காட்டலாமே! நான் இப்போது படைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். பாண்டிப் பெரும் படையில் கொங்குப் படைப் பகுதி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது என் ஆவல். அதனை அமைத்து, அதற்கு ஒப்பற்ற படைத் தலைவர் ஒருவரையும் நிறுவி விட்டால், எந்த நாட்டையும் எளிதில் வென்று விடலாம்.” - பாண்டியனுடைய கருத்து மன்ருடியாருக்கு விளங் கியது. அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

சோழ அரசர்களுக்குத் துணையாகக் கொங்குப் படை சென்றது. அப்பொழுதெல்லாம் அது கூலிப் படையாகவே போயிற்று என்று தெரிகிறது. அந்த முறையில் நான் படை சேர்க்க விரும்பவில்லை. பாண். டிப் பெரும்படையின் பகுதியாக அது இருந்து விளங் கும்" என்று பாண்டியன் தன் கருத்தைப் பின்னும் விளக்கினன். - - > -

'படை வீரர்களைப் பாண்டிப் படையில் சேரச் சொல்லலாம். ஆனால், அவர்களுக்கு ஏற்ற படைத் தலைவன் வேண்டும். அவர்கள் மிடுக்குடையவர்கள். அவர்கள் விரும்பும் தலைவகை இருந்தாலன்றி அவர் களை நடத்த முடியாதே' என்ருர் சர்க்கரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/13&oldid=1406634" இலிருந்து மீள்விக்கப்பட்டது