பக்கம்:நல்ல சேனாபதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல சேனுபதி 5

"அதைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. நான் தக்க சேனதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத் திருக் கிறேன். முதலில் தலைவரை நிச்சயம் செய்துகொண்ட பிறகே, படையைக் கூட்டும் எண்ணம் எனக்கு வந்தது.” "அந்தத் தலைவர் கொங்குப் படைக்கு உகந்தவர் என்று நன்ருகத் தெரிந்து கொண்டீர்களா?” -

'நன்ருகத் தெரியும்.” "படையைக் கூட்டுவதற்கு முன்பே இதனைத் தெரிந்துகொள்ள முடியாதே! தாங்கள் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?’ என்று கேட்டார் கொங்கு நாட்டுத் தலைவர்.

“தலைவர் இன்னர் என்று சொன்னல் நீங்களே அவர் ஏற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்கள்.”

"யார் அவர்?" “சர்க்கரை மன்ருடியார்!’ - மன்ருடியாருக்கு வியப்பு உண்டாயிற்று. சிறிது நேரம் பேசவில்லை. அவர் தோள் பூரித்தது.

“மன்னர் பிரான் என்பால் வைத்துள்ள அன்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன். கொங்கு நாட்டு வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை முன்பே தெரிவித்திருக்கலாமே!"

'இப்போது அதற்கு ஏற்ற செவ்வி வந்திருக்கிறது. சோழனுக்குத் தான் முந்திய போர்களில் தோல்வியுற்ற அவமானம் தாங்கவில்லை. கொங்கு நாட்டின் ஒரு பகுதியையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பதாகத் தெரிகிறது. நம்முடைய ஒற்றர் கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிருர்கள்.

உங்கள் கொங்கு நாட்டைப் பாதுகாக்கும் கடமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/14&oldid=583977" இலிருந்து மீள்விக்கப்பட்டது