பக்கம்:நல்ல சேனாபதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல சேனபதி 7

வோம்” என்று அதில் வீறு பேசியிருந்தான். அது கண்டு சினந்த மன்ருடியார், 'கொங்கு நாடு பாண்டியன் அரசாட்சியில் இருப்பதைச் சோழன் மறந்து விட் டானே? இந்த ஒலை மதுரைக் கல்லவா போகவேண் டும்?' என்று சீறினர்.

சோழனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அடிபட்ட புலி போல் ஆன்ை. கொங்கர் தலைவன் தன்னை அவ மானம் செய்து விட்டதாக எண்ணித் துடித்தான். கொங்கு நாடு பாண்டியனுக்குரிய தென்பதை அவன் நினைவூட்டும்படியாயிற்றே என்று நாணினன்.

இப்போது சர்க்கரை மன்ருடியார் பாண்டியன் படைத் தலைவர்களில் ஒருவராக, அம்மன்னனுடைய மதிப்புக்கு உரியவராக விளங்கினர். சோழ மன்னன் ஒலே விடுத்ததையும், பிறவற்றையும் அவர் பாண்டி யனுக்குச் சொன்ன பொழுது அம் மன்னன், "நான் தக்க சமயத்தில் என் கருத்தை நிறைவேற்றிக் கொண் டேன். சற்றே தாமதம் செய்திருந்தால்?..." என்று சொல்லிப் பேச்சை முடிப்பதற்கு முன், "ஒன்றும் ஆகி யிராது. சோழனுக்குக் கூலிப் படையாகப் போக நான் துணிந்தாலும், எங்கள் வீரர்கள் இசைய மாட்டார்கள்' என்ருர் சேனுபதி. - -

女 கொங்கர் தலைவரின் வீரம் வெளிப்படும் நாள் வந்தது. பாண்டிய மன்னன் நடத்திய அடுத்த போரில், கொங்கு நாட்டு வீரர் முன்னணியில் நின்று வெற்றியை வாங்கித் தந்தனர். பாண்டியனுக்கு உண்டான பெரு மிதத்துக்கு அளவில்லை. . . . . . ."

எதிர்பார்த்தபடி சோழன் கொங்கு நாட்டின்மேல் படையெடுத்து விட்டான். கருவூருக்குக் கிழக்கே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/16&oldid=583979" இலிருந்து மீள்விக்கப்பட்டது