பக்கம்:நல்ல சேனாபதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நல்ல சேனுபதி

படை வந்து கொண்டிருந்தது. கருவூருக்குள் நுழைந் தும் விட்டது. பாண்டிய அரசனுக்கு அந்தச் செய்தி தெரிந்தது. சோழனுக்கு இனித் துணிவு வராது என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். கொங்கர் தலைவ ரைத் துணையாகப் பெருததல்ை சோழன் போரிடத் துணியான் என்பது மாத்திரம் அன்று; பாண்டியன் பெரும்படையில் கொங்கு வீரர்கள் சேர்ந்திருக்கிருர் கள் என்ற செய்தியைக் கேட்ட பிறகு, முன்பு சிறிதே இருந்த ஆசையும் ஒடி ஒளிந்திருக்கும் என்று அவன் எண்ணினன். அவன் எண்ணம் பொய்யாயிற்று.

சோழன் போர் செய்யத் துணிந்தது கண்டு, அவனை விரட்டப் பாண்டியன் தானே செல்ல எண்ணி ன்ை. மற்ற மன்னர்களை வெல்ல அவனுக்கு உண் டாகும் மிடுக்கைவிட, சோழன் என்ருல் உண்டாகும் வேகம் அதிகம். இரண்டு குலமும் ஒன்றையொன்று மாருகவே கருதி வந்தது வரலாறு கூறும் உண்மை. "நானே நேரிற் சென்று சோழனை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் செய்து வருகிறேன்” என்று பாண்டியன் துடித்தான். படைத் தலைவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ஆராய்ந்தான். தன் கருத்தையும் வெளியிட்டான். 畿

படைத் தலைவர்களுள் ஒருவர் மன்னன் கருத்தை ஆமோதித்தார். மற்றவர்கள் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். சர்க்கரை மாத்திரம் பேசாமல் இருந்தார். -

பாண்டியன் அவரை நோக்கினன். "நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே!' என்ருன்.

"பல காலமாகப் பாண்டிப் படையில் இருந்து அநுபவம் அடைந்தவர்கள் பேசும்பொழுது நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/17&oldid=583980" இலிருந்து மீள்விக்கப்பட்டது