பக்கம்:நல்ல சேனாபதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நல்ல சேனபதி

வலிமை இன்னதென்று யாவருக்கும் தெரியும். அவ. னுக்கு உண்மையான வீரமும் படை வலிமையும் இருந். தால் இப்படி ஒரக் காலிலே போயா முட்டுவான்? தைரி யம் இருந்தால் நேரே மதுரைப் பக்கம் அல்லவா வர வேண்டும்? அவலை நினைத்துக்கொண்டு அவன் உரலை இடிக்கிருன். அவனை அடக்கப் பெரிய படை ஒன்றும் வேண்டியதில்லை.”

'கொங்குப் படை ஒன்று மட்டும் இருந்தால் போதுமா? வேறு படைகளையும் துணைக்கு அழைத்துச் செல்லலாமே!” என்ருன் மன்னன்.

‘'வேண்டியதில்லை. கொங்கு வீரர்கள் தனியே போரிட்டுத் தனியே வெற்றி கண்டார்கள் என்ற பெரு. மையைக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் என் தோழர்களுக்கு இராதென்று நினைக்கிறேன்.”

சே! சே என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்?. அப்படி வேறு வேருக நினைக்க மாட்டோம்” என்று. மற்றத் தலைவர்கள் இடைமறித்துக் கூறிஞர்கள்.

கொங்கப் பெரும் படை பாண்டியன் ஏவலினல் காரைக்கோவாகிய சர்க்கரை மன்ருடியார் தலைமையில் எழுந்தது. தங்கள் நாட்டுக்கு வந்த ஏதத்தைப் போக் கும் பெரும் பேறு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. என்ற எண்ணம் கொங்கு வீரர்களுக்கு ஊக்கத்தை. ஏற்படுத்தியது. கருவூரை அடைந்தது படை சோழர் படைக்கும் கொங்கர் படைக்கும் போர் மூண்டது.

சோழன் எதையோ நினைந்து படையெடுத்து விட் டாலும், பிறகு பாண்டியன் படை வந்து எதிர்த்தால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றியது. ஆல்ை, இப்போது பாண்டியன் படை முழுவதும் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/19&oldid=583982" இலிருந்து மீள்விக்கப்பட்டது