பக்கம்:நல்ல சேனாபதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல சேனுபதி 11

என்று உணர்ந்து ஆறுதல் பெற்ருன். கொங்கர்களின் வீரத்தைக் கண்டறியாதவன் அவன்.

போர் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று சோழன் எதிர்பார்க்கவில்லை. சர்க்கரையின் படைத் தலைமையில் கொங்க வீரர்கள் எத்தனை கட்டுப்பாட் டுடன் போரிட்டார்கள் ஒவ்வொரு வீரனும் ஒர் யானை யைப் போல இருந்தான். அவர்களுடைய ஆற்றலுக்கு முன் சோழ வீரர் எம் மாத்திரம்? சோழர் படை தளர்ச்சி யுற்றது. மெல்ல மெல்லக் கருவூரின் எல்லையினின்றும் பின் வாங்கியது.

சோழர் படையில் பலர் அழிந்தனர். சோழ வீரர் . களின் குருதி ஆருக ஓடியது. படைக்குத் தலைமை தாங்கி நின்ருன் சோழன். கொங்கர் படைத் தலைவரான சர்க்கரையும் சோழனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். சர்க்கரை விட்ட அம்பு சோழனது தலைக் கவசத்தைத் தள்ளியது. அடுத்த அம்பு அவன் கேசத்தைப் பிய்த்துக் கொண்டு சென்றது, தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போயிற்று' என்று அவன் புறங்காட்டி ஒடத் தொடங்கினன். சோழப் படை தன் வேகத்தை ஒட் டத்தில் காட்டியது. அந்தப் படையை நெடுந் தூரம் கொங்குப் படை துரத்திச் சென்றது. இனி மீள மாட் டார்கள் என்று எண்ணிச் சர்க்கரை திரும்பினர்.

$r . மதுரையில் பாண்டிய மன்னன் வெற்றி வீரராகத் திரும்பிய மன்ருடியாரை எதிர்கொள்ள ஆர்வத்தோடு காத்திருந்தான். போரில் தோள் வலி காட்டிய சிங்கக் குட்டிகளாகிய படை வீரர்களுடன் சர்க்கரை வந்து கொண்டிருந்தார். வரும் வழியெல்லாம் அவருக்குப் பாராட்டு. மதுரையை வந்து அடைந்ததும் மன்னன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/20&oldid=583983" இலிருந்து மீள்விக்கப்பட்டது