பக்கம்:நல்ல சேனாபதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன்

சோழர் படையும் பல்லவ அரசன் படையும் பொரு தன. ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ மரபினனுகிய அவன் சோழ அரசு வரவர மங்கி வருவது தெரிந்து, அந்நாட்டின்மேற் படையெடுத்துக் கைப்பற்றலாம் என்று துணிந்து போர் செய்யத் தொடங்கிஞன். -

அக் காலத்தில் மூன்ரும் இராசராசன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு முன்பு அர சாண்ட சோழர்களுடைய வீரமும் விறலும் அவனுக்கு இல்லை. சோழ நாடு வரவரச் சுருங்கி வந்தது. :

கோப்பெருஞ்சிங்கன் போரிடத் தொடங்கியவுடன், சோழ மன்னன் எதிர் நிற்க முடியாதென்று கருதிப் பிறருடைய துணையை வேண்டினன். அவனுடைய ஆட்சியின்கீழ் காவிரி வட பகுதிகளை ஆண்டு வந்த போசள வீர நரசிம்ம தேவன் என்பவனுக்குச் செய்தி சொல்லியனுப்பி, எப்படியேனும் படையுடன் சென்று கோப்பெருஞ்சிங்கனைச் சோழநாட்டிற்குள் புகாமல் ஒடும்படி செய்யவேண்டும் என்று பணித்தான். - வீர நரசிம்ம தேவன் தன்னிடம் உள்ள படைகளை யும், சோழன் படைகளையும் கொண்டு எதிர்க்கப் புகுத் தால் சிங்கன வெல்லுவது அரிது என்பதை உணர்ந் தான். துணையாக வேறு படைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தான். - . அக் காலத்தில் கொங்கு நாட்டில் பல வேளிர்கள் வீரமுடையவர்களாய் வாழ்ந்திருந்தனர். ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/43&oldid=584006" இலிருந்து மீள்விக்கப்பட்டது