பக்கம்:நல்ல சேனாபதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன் 35

வரும் திண்டோள் படைத்த வீரர்கள் பலரை வைத் திருந்தனர். யாரேனும் பெருமன்னர் துணைக்கு அழைத்தால், படையுடன் சென்று அவர்களுக்குப் போரில் துணை செய்து வெற்றி பெறும்படி செய்தனர்.

அந்நாட்டில் காங்கேயம் என்று ஒர் ஊர் இருக் கிறது. அதற்குச் சிங்கை என்றும் ஒரு பெயர் உண்டு. அங்கே லிங்கையர் என்ற வேளாண் செல்வர் வாழ்ந் திருந்தார். பரம்பரை பரம்பரையாக வீரமும், செல்வ மும், வள்ளன்மையும் உடைய மரபில் வந்தவர் அவர். அவரிடம் பல பெருவீரர்கள் இருந்தனர்.

இந்தச் செய்தியை அறிந்த வீர நரசிம்ம தேவன், லிங்கையருக்கு ஆள் அனுப்பித் தனக்குப் போர்த் துணை யாக வரவேண்டும் என்று வேண்டினன். போர் என்ருலே பூரித்துப் பொலியும் தோளைப் பெற்ற வீரர் களுக்குத் தலைவராகிய அவர், நரசிம்ம தேவனுடைய விருப்பத்துக்கு இணங்கித் தம் படையுடன் சென்ருர்.

போர் கடுமையாக நடந்தது. சோழநாட்டு வீரர் களைவிடப் பன்மடங்கு வீறுடன் கொங்கு நாட்டு வீரர்கள் போர் செய்தனர். அவர்களுடைய பெருவிற லால் சோழர் படைக்கு வெற்றி கிட்டியது. கோப் பெருஞ்சிங்கன் தன் ஊர்ப் போய்ச் சேர்ந்தான். பெரும் படையுடனும் சோழநாட்டைக் கைப்பற்றலாம் என்ற பேராசையுடனும் வந்த அவன், மீண்டு சென்றது வீர நரசிம்ம தேவனுக்குப் பெருவியப்பாக இருந்தது. கொங்குநாட்டுப்படையின் உதவி இராதிருந்தால், இந்த வெற்றி தனக்குக் கிடைக்க வழியில்லை என்பதை அவன் நன்கு தெளிந்தான். . . . *3

சோழநாடே வெற்றி ஆரவாரத்தில் மூழ்கியிருந் தது. வீரநரசிம்ம தேவன் கொங்குத் தலைவராகிய லிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/44&oldid=584007" இலிருந்து மீள்விக்கப்பட்டது