பக்கம்:நல்ல சேனாபதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன் 39

தோன்ருமல் சிறிது நேரம் மயங்கி நின்ருர். அப்போது வீதியில் குழந்தைகளின் விளையாட்டு ஆரவாரம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தார். இதென்ன, தங் கத் தேர்போல அல்லவா இருக்கிறது! என்று வியந்து அருகில் சென்ருர். பல்லவராயருடைய மகன் அதை மிடுக்குடன் இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தார்.

சோமன் என்பவன் சிறு குழந்தையாக இருந்த போது, தன்னை வந்து இரந்த புலவனுக்குத் தன் முன் னுச்சி மயிரில் அணிந்திருந்த சுட்டியைத் தந்தானும். இந்தக் கதை இப்போது புலவர் நினைவுக்கு வந்தது. நாம் பல்லவராயரைத் தேடிக்கொண்டு வந்தோம். நம் பொல்லாத காலம் அவர் ஊரில் இல்லை. அவர் புதல்வகிைய இவனிடம் கைநீட்டுவோம். சோமனைப் போல் இவன் ஏதாவது தந்தால் பெற்றுப் போகலாம். என்று எண்ணினர். ஆசைக்கு இது நடக்கும், இது நடக்காது என்ற ஆராய்ச்சி தோன்ருது அல்லவா?

குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். புலவர் அவன் முன்னே போய் நின்ருர். "நான் ஏழைப் புலவன்; எனக்கு ஏதாவது தா” என்று சொல்லிக் கையை நீட்டினர். அந்தக் குழந்தைக்கு என்ன தோன்றிற்ருே என்னவோ, சிறு தேரைக் கட்டியிருந்த கயிற்றைத் தன் கையிலிருந்து அப்புலவர் கையில் கொடுத்து விட்டான். புலவர் கை அதைப் பெற்றுக் கொண்டது. அவர் வியப்பில் ஆழ்ந்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. குழந்தை அதை இழுத்துத் தன்ளுேடு விளையாடச் சொல்கிருளு? சோமன் கொடுத் தது போல இதுவும் குழந்தையின் கொடையானல், இதை வாங்கிக் கொள்ளலாமா? குழந்தை விளையாடும் பொருட்டு அருமையாக வைத்திருக்கும் பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/48&oldid=584011" இலிருந்து மீள்விக்கப்பட்டது