பக்கம்:நல்ல சேனாபதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நல்ல சேபைதி

ளாயிற்றே! இதை வாங்கிச் செல்வது முறையா? குழந் தைக்கு ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அப்படி இருக்க அவன் விளையாடும் தேரை வாங்கிக் செல்வதா? அது என்ன சாதாரணமான தேரா? தங்க மும் மணியும் வைத்து இழைத்தது அல்லவா? குழந்தை தான் கொடுத்து விட்டதென்ருல், விலைபெறும் அதை அவர் எடுத்துச் செல்லலாமா? குழந்தையின் தாய் தந் தையர் அதை அறிந்து அவரைத் திருடன் என்று எண்ணிவிட்டால் என் செய்வது?-இப்படியாக அவர் உள்ளம் பல எண்ண அலைகளினிடையே கிடந்து தடுமாறியது. -

குழந்தை அவர் கையில் தேரைக் கொடுத்தானே யன்றி மறுபடி கேட்கவில்லை. மற்றக் குழந்தைகள் இந்த் விநோதத்தைக் கண்டு அப்படி அப்படியே நின்று விட்டன. அருகில் இருந்த சிலர் குழந்தையைப் பெற்ற தாயினிடம் போய் நிகழ்ந்ததைச் சொன்னர்கள். அவளும் பிற பெண்மணிகளும் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார்கள். புலவர் தேரை இழுக்கும் கயிற் றைக் கையில் பிடித்தபடியே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தார். -

தாயும் பிறரும் வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலவரிடம் சென்று, "நீங்கள் யார்?' என்று கேட்டாள், குழந்தையின் அன்னை. புல வருக்குச் சற்றே உணர்வு வந்தது. "நான் இந்த வீட்டு வள்ள லிடம் ஏதாவது பெற்றுப் போக வந்தேன். அவர் இல்லையென்று அறிந்து இந்தக் குழந்தையிடம் வந்து கையை நீட்டினேன். இவன் என் கையில் இந்தத் தேரைக் கயிற்ருேடு தந்துவிட்டான். குழந்தை யின் அருங்குணத்தைக் கண்டு வியந்து நின்றேன்" என்று சொல்லிவிட்டு, "இந்தா, இந்தத் தேரை நீயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/49&oldid=584012" இலிருந்து மீள்விக்கப்பட்டது