பக்கம்:நல்ல சேனாபதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நல்ல சேனுபதி

கேனும் அது ஒளிந்திருக்கும் என்று எண்ணிக் குன்றை நோக்கிச் சென்ருன். மரங்கள் அடர்ந்து இருண் டிருந்த அந்தப் பகுதியில் புலியின் உறுமலை எதிர் நோக்கிப் போனன்; ஆனால், மனித அரவம் கேட்டது; அவனுக்கு வியப்பாக இருந்தது. தன் ஊர்க்காரர்கள் புகுவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் யார் வந்திருக்கக் கூடும் என்று யோசித்தான். சற்றே மரத்தின் மறைவி லிருந்து உற்றுக் கேட்டான். மனிதக் குரல்தான்; ஐயமே இல்லை.

அவன் கூர்ந்து கவனித்தபோது இரண்டு மூன்று குரல்கள் வேறு வேருகக் கேட்டன. அவர்கள் யாரேனும் வீரர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணியபோது, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. .

மெல்ல அடி எடுத்து வைத்து அவர்கள் இருந்த இடத்தை அணுகினன். என்ன ஆச்சரியம்! அவர்கள் ஒரு பாறையின்மேல் அணிகலன்களையும் பொற்காசு களையும் பரப்பி வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். செட்டி பிள்ளையப்பன் வரும்போது காவின் கீழ்ச் சருகு கள் சலசலத்தன. அந்த ஒசை அங்கே இருந்தவர்கள் காதில் விழவே, அவர்கள் அவனைப் பார்த்தார்கள். நெடிய உருவம், கையில் வேல், வீரஞ் செறிந்த உட லமைப்பு இவற்றுடன் செட்டி பிள்ளையப்பன் காட்சி புதுளித்தான். அவனைக் கண்டவுடனே, அந்த மூவரும் பயந்து கையில் சில பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

அப்போது தான் அவனுக்கு அவர்கள் திருடர்கள் என்பது தெரிய வந்தது. பல இடங்களில் திருடிய பொருள்களைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/57&oldid=584020" இலிருந்து மீள்விக்கப்பட்டது