பக்கம்:நல்ல சேனாபதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி

காவிரியாறு குடகு நாட்டில் தோன்றி, கன்னட நாட்டு வழியே படர்ந்து, கொங்கு நாட்டில் புகுந்து வளம் பெருக்கி, பின்பு சோழ நாட்டை ஊட்டிக் கடலில் புகுகிறது. அதன் நீரால் மிக்க வளத்தைப் பெறுவது சோழ நாடு. அதல்ைதான் அருணகிரி நாதர், 'ஏழ் தலம் புகழ் காவேரியால்விளை சோழ மண்டலம்' என்று பாடி யிருக்கிருர். கொங்கு மண்டலத்திலுள்ள சில பகுதிகளும் ஓரளவு காவிரியினுல் விளைவு பெறுகிறது.

முன் காலத்தில் சில ஆண்டுகளில் காவிரியாற்றில் பெரு வெள்ளம் வந்து விடும். கரை சில இடங்களில் உடைந்து போகுமோ என்ற அச்சம் உண்டாகும். அங்கங்கே உள்ள மக்கள் அந்தச் சமயங்களில் கரையை உயர்த்தி வலி பெறச் செய்வார்கள்.

மூன்ரும் குலோத்துங்கன் அரசாட்சி செய்திருந்த காலத்தில் ஒருமுறை காவிரியாற்றில் கட்டுக் கடங்காத வெள்ளம் வந்து விட்டது. வெள்ளம் வந்தால் அரசன் ஆணையை எதிர்பாராமலே அந்த அந்த ஊரிலுள்ள மக்கள் வேறு வேலைகளை யெல்லாம் விட்டு விட்டுத் திரண்டு வந்து கரையை வலியுறுத்தத் தொடங்குவார் கள். அப்படியே இப்போதும் மக்கள் செய்தார்கள். ஆளுல் இந்த முறை வந்த வெள்ளம் மிகப் பெரிதாக இருந்தது. தங்கள் முயற்சிக்குள் வெள்ளம் அடங்காது என்று அஞ்சினர்கள் குடிமக்கள். - - கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் சேரும் எல்லையில் கருவூர் இருக்கிறது. அதற்கு ஒரு காத தூரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/61&oldid=584024" இலிருந்து மீள்விக்கப்பட்டது