பக்கம்:நல்ல சேனாபதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி 55

"வெள்ளத்தின் நிலை எப்படி இருக்கிறது? கரை போதிய வலிமையுடையதாக இருக்கிறதா?” என்று கேட்டார் கம்பர். - ~

"எங்களால் இயன்ற அளவு பாடு பாடுகிருேம்: மக் களும் வஞ்சகம் இல்லாமல் உழைக்கிருர்கள். வெள்ளம் ஒரே நிலையில் இருந்தால் அச்சம் இல்லை. எப்படியோ பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனல் மிகுதியானல் இந்தக் கரை போதாது. எல்லாம் புதிய மண், ஆகை யினுல் எளிதில் கரைந்து போகும்; உள் வாங்கிவிடும். வெள்ளம் பெருகாமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் இறைவனை வேண்டிக்கொண் டிருக்கிருேம்' என்ருர்கள் அதிகாரிகள். -

'இத்தகைய வெள்ளம் முன்பு வந்தது இல்லையோ?” என்று மீட்டும் கேட்டார் கம்பர். . .

'வெள்ளம் வருவது வழக்கந்தான். ஆல்ை இவ் வளவு பெரிய வெள்ளம் எங்கள் நினைவு தெரிந்து வந்த தில்லை.' - - அப்போது கொங்கு நாட்டுத் தலைவர் ஒருவர் முன்னே வந்தார். கம்பருடைய திருவடியில் வீழ்ந்து எழுந்தார். கம்பர் தெய்விக ஆற்றல் படைத்த பெருங் கவிஞர் என்று யாவரும் சொல்வார்கள். ஆகையால் அவர் வணங்கத் தக்கவரென்ற எண்ணத்தால் அந்தக் கொங்குத் தலைவர் அவரை அடிபணிந்தார். பிறகு மிகவும் குழைவோடு, 'ஒரு விண்ணப்பம்” என்ருர்,

' என்ன, சொல்லுங்கள்.' "இந்த வெள்ளம் கட்டுக் கடங்காமல் போளுல் இந்தப் பகுதியில் உள்ள கரை நெடுந்துரம் உடைந்து விடும். அப்போது இதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இதன் பின் உள்ள சோழ நாட்டின் பகுதிகளும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/64&oldid=584027" இலிருந்து மீள்விக்கப்பட்டது