பக்கம்:நல்ல சேனாபதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நல்ல சேளுபதி

வெள்ளக்காடு ஆகி விடும். உடைப்பு எடுப்பதற்கு முன் கரையைக் காப்பாற்றில்ை தான் நலம். எங்காவது ஓரிடத்தில் சிறிய உடைப்பு எடுத்தாலும் போதும்; பிறகு ஆபத்துத்தான். மிக விரைவில் உடைப்புப் பெரி தாகி நாடு பாழாகி விடும்.”

"நீங்கள் சொல்வதைக் கேட்கும்பொழுது இப் போது உள்ள நிலை மிகவும் அபாயமானது என்று தெரிகிறது.' - "அதைத்தான் இங்கே விண்ணப்பித்துக்கொள்ள வருகிறேன். மனிதர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து பார்க்கிருேம். வெள்ளம் வந்தது மனித சக்திக்கு அப்பாற் பட்ட இறைவன் செயல். அது மேலும் பெருகாமல் தடுக்க நம்மால் ஆகாது. இறை வன் திருவுள்ளம் இரங்கி வெள்ளத்தை மட்டுப்படுத்த வேண்டும். அந்த இறைவனை நாங்கள் கண்டறியோம். அருள் பெற்ற பெரியவர்களே எங்களுக்குக் கண் கண்ட தெய்வம். இப்போது தங்கள் வரவால் நாங்கள் பெரிய பேறு பெற்ருேம். தாங்கள் அருள் வாக்கு உடையவர் கள். தாங்கள் நினைத்தால் நலமும் செய்யலாம்; தீங்கும் புரியலாம்..." - -

அந்தத் தலைவருடைய பேச்சின் போக்கை உணர்ந்துகொண்டு அருகில் இருந்தவர்களும் தங்கள் கைகளைக் குவித்துக் கும்பிட்டவர்களாய், "ஆம், ஆம்' என்ருர்கள். - முன்னவர் மறுபடியும் பேசலாஞர் : "தங்கள் திருவாக்கால் ஒரு கவி பாடி இந்தக் காவிரி யன்னையின் சீற்றத்தைத் தணிக்கவேண்டும். தங்கள் நாவில் விளையாடும் கலைமகள் அருளால் எங்கள் வேண்டுகோள் நிறைவேற வேண்டும்' என்று மன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/65&oldid=584028" இலிருந்து மீள்விக்கப்பட்டது