பக்கம்:நல்ல சேனாபதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகை தாங்கிய வீரன் 69

வேறு வழியின்றி வாணன் பாண்டியனைப் புகல டைந்தான். தம் குலத்தாரை அஞ்சுவித்து நடுங்கச் செய்த பழைய வாணல்ை பாண்டிய மன்னர் பெற்ற தோல்வி மாறிவிட்டதாக எண்ணி இந்தப் பாண்டியன் பூரித்து மகிழ்ந்தான்.

ஆறகழுர் வாணன் மீட்டும் தன் ஊர் சென்ருன், அது முதல் அவன் பாண்டியன்கீழ் ஆட்சி புரியும் குறு நில மன்னனுகிவிட்டான்.

வாணனைத் தந்திரமாகப் பற்றி வந்த சூரியனிடம் பாண்டியனுக்குப் பெருமதிப்பு உண்டாகிவிட்டது. அவனைப் பலபடியாகப் பாராட்டினன். பல பரிசில்கள் அளித்தான். ஆகவராமன் என்ற பட்டப் பெயர் வழங்கி ஞன். வெறும் சூரியன் என்று உள்ள பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் என்று அழைத்தான். வேளாளர்களைக் கங்கா புத்திரர்கள் என்பார்கள். காங் கேயன் என்பதற்குக் கங்கைக்கு மகன் என்று பொருள். வேளாளர் தலைவனுதலின் சூரியனைக் காங்கேயன் என்று சிறப்பித்தான் பாண்டியன். கொங்கு நாட்டின் ஒரு பிரி வாகிய எழுகரை நாடு என்ற பகுதியை அவனுக்கு வழங்கி, அதற்கு அவனைத் தலைவனுக்கின்ை. அது முதல் சூரிய காங்கேயன் எழுகரை நாட்டு அதியளுக வளவாழ்வு பெற்று வாழ்ந்தான்.

அவனுடைய புகழைப் புலவர்கள் பாடிஞர்கள். ஆறை வாணனைப் பற்றிக் கொண்டுவந்து பாண்டிய னுக்கு நேரே நிறுத்திய செயலே ஒரு புலவர் பின் வரு மாறு பாடியிருக்கிருர் .

மிண்டாறை வாண&னமுன்

வெட்டாமல் பாண்டியன் நேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/78&oldid=584041" இலிருந்து மீள்விக்கப்பட்டது