பக்கம்:நல்ல சேனாபதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துழாவிய கொம்பு 73.

செய்வான் மூலன். போகும்போது, சமையலுக்கு வேண்டிய பண்டங்களையும் பாத்திரங்களையும் கொண்டு போவான். ஓரிடத்தில் அவற்றைப் போட்டு விட்டு மூலிகை ஆராய்ச்சி செய்வான். அவனுடைய மாளுக் கன் சமையல் செய்து வைப்பான். குரு பல இடங் களுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவான். வந்து இருவரும் உணவு கொள்வார்கள். மாலை நேரம் ஆனவுடன் மலையை விட்டு இறங்கி, அடிவாரத்தில் உள்ள ஊருக்குச் சென்று விடுவார்கள். -

ஒரு நாள், அவர்கள் மலையின்மேல் ஏறிச் சென் ருர்கள். வழக்கம்போல் மூலன் மூலிகையைத் தேடிச் சென்ருன், அவன் மாணுக்கனும் சில இடங்களைப் பார்த்துவிட்டு, ஓரிடத்தில் சமையல் செய்யத் தொடங் கின்ை. - - - -

ஒரு பானையில் உலை வைத்து அரிசியைப் போட்டு அது கொதிக்கும்போது அதைக் கிளற வேண்டி யிருந்தது. அருகில் ஒரு கொம்பு கிடந்தது. அதை எடுத்து அதனல் கிளறிஞன். அந்தக் கொம்பின் சம்பந்தத்தால் சாதம் முழுவதும் கறுப்பாக மாறி விட்டது. அதைக் கண்டவுடன் மாளுக்கனுக்கு அச்சம் உண்டாயிற்று ஐயோ! நம் ஆசிரியர் வந்தால் சோற். றைக் கெடுத்துவிட்டாயே என்று வைவாரே! என்று அஞ்சினன். நல்ல வேளையாகக் கையில் இன்னும் சிறிது அரிசி இருந்தது. அந்தக் கறுப்புச் சோற்றைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, பானையை நன்ருக அலம்பிப் புதிதாகச் சோற்றை வடித்தான் அந்தச் சோறு குருவுக்கு மாத்திரம் போதுமானதாக இருந்தது. கெட்ட சோற்றைக் குரு கண்டால் கோபிப்பார் என்பதாலும், தனக்குச் சோறு இல்லாமற் போனதாலும் அவன் ஒரு யோசனை செய்தான். எப்படி ஆலுைம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/82&oldid=584045" இலிருந்து மீள்விக்கப்பட்டது