பக்கம்:நல்ல சேனாபதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நல்ல சேனுபதி

வைைலும், அவனும் முதியவன்தான். அவன் குற்றேவல்கள் செய்து குருவை வழிபடுபவன்.

கஞ்சமலைக்குச் செல்ல வேண்டுமென்று விரும்பிய மூலன், அந்த மாளுக்கனையும், துணையாக இருப்பான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு சென்ருன். அங்கே மரங்கள் மிக அடர்த்தியாக இல்லாவிட்டாலும், மூலிகைகள் நிரம்ப இருந்தன. காட்டு விலங்குகள் வாழும்படி காடு அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மூலனுக்கு உள்ளுற ஓர் ஆசை இருந்தது. சித்த வைத்தியத்தில் துறை போனவர்கள் பலருக்கு அந்த ஆசை இருப்பதுண்டு. தாமிரத்தைத் தங்கமாக்கும் இரச வாத வித்தையில் உள்ள ஆசைதான் அது. இரசத் தைக் கட்டி இரசமணி செய்தல், முப்பூ முடித்தல் முதலிய சில திறங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து விட் டால், அடுத்தபடி இரசவாதம் செய்யவேண்டும் என்ற ஆசை உண்டாகிவிடும். ஆனல், அதைச் சாதித்த வர் உண்டோ, இல்லையோ தெரியாது. மூலனுக்கும் அந்த ஆசை இருந்தது வியப்பன்று. அதற்கு வேண்டிய மூலிகைகள் கஞ்சமலையில் இருப்பதாக ஒரு பரதேசி கூறியதைக் கேட்டதளுல்தான் அங்கே போக வேண்டும் என்ற அவா அவனுக்கு உண்டாயிற்று. மலையின் மேல் ஏறி, பல இடங்களையும் பார்த்தான் மூலன். உண்மையிலேயே பல அருமையான மூலிகை கள் இருந்தன. சித்தர்கள் வாழும் இடமாக இருக்க அந்த மலை பல வகையிலும் தகுதியுடையதே என்பதை உணர்ந்தான். அவன் கற்பனை விரிந்தது. நிச்சய மாக இரசவாத வித்தையைச் சாதித்துவிடலாம் என்று நம்பின்ை. . . . . . . . . ."

ஒவ்வொரு நாளும் மாளுக்கனுடன் விடியற் காலை யில் எழுந்து மலையின் மேற்சென்று, மூலிகை ஆராய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/81&oldid=584044" இலிருந்து மீள்விக்கப்பட்டது