பக்கம்:நல்ல சேனாபதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துழாவிய கொம்பு

பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வந்த குலம் அது. அக்குலத்தில் பிறந்து சித்தர்கள் இயற்றிய நூல்களை ஆராய்ந்து மருத்துவம் செய்து வந்தான் மூலன் என்னும் அந்தணன். தன் தந்தையாரிடம் கற்றதோடு, தன்னுடைய ஆராய்ச்சியாலும் அவன் பல நுட்பங்களை உணர்ந்திருந்தான். -

மூலிகைகளின் இயல்பை ஆராய்வதில் அவனுக்கு மிகுதியாக ஊக்கம் இருந்தது. மலையை அடுத்த இடங் களுக்குச் சென்று, அங்கே உள்ள மூலிகைகளை ஆராய்ந்து தொகுத்து, பற்பம் செய்வதற்கும் பிற மருந்துகள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்வான். கொங்கு மண்டலத்தில் திருச்செங்கோட்டைச் சார்ந்து கஞ்சமலை என்ற சிறிய மலை இருக்கிறது. அதில் மிகவும் அரிய மூலிகைகள் உள்ளன. அங்கே பழங் காலத்தில் கஞ்சமலைச் சித்தர் என்பவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் என்று சொல்லுவார்கள். மூலனுக்கு இந்தச் செய்திகள் காதில் விழுந்தபோது, அங்கே போய்ப் பார்த்து வரவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

மூலன் முதுமைப் பிராயம் உள்ளவன். 'பால சோதிடம், விருத்த வைத்தியம்' என்றபடி, அவனுக்கு மருத்துவ நூல் அறிவு நிரம்பியிருந்தது. அவனிடம் சில மாளுக்கர்கள் மருத்துவம் பயின்ருர்கள். அவர் களுக்குள் மிகவும் நெருங்கிப் பழகும் மாளுக்கன் ஒருவன் இருந்தான். குருவை நோக்க அவன் இளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/80&oldid=584043" இலிருந்து மீள்விக்கப்பட்டது