பக்கம்:நல்ல சேனாபதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் பரப்பின வள்ளல்

"நீங்கள் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு இருக்கிறீர்கள். உங்களால் கொடுக்க முடிந்தவற்றையெல்லாம் கொடுத்து வருகிறீர் கள்" என்ருர் அன்பர். • ,

'இறைவன் திருவருளால் கிடைத்ததைப் பலருக் கும் கொடுப்பதில்தான் இன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாத்து வைத்துக்கொண்டு நாமே உண்பதில் என்ன நன்மை இருக்கிறது?’ என்ருர், ஈகையில்ை ஏற்றம் பெற்ற செல்வர். -

"இங்கே வருகிறவர்களும், பிறந்தகம் வந்த பெண் பிள்ளை தன் ஆசையை யெல்லாம் தாயிடம் சொல்லித் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்று இன்புறுவது போலக் கேட்கிருர்கள்.” -

"இதில் என்ன வியப்பு இருக்கிறது? தங்களுக்கு வேண்டியதைக் கேட்கிருர்களே; அதுவே என் பாக்கியம் அல்லவா? இன்னுருக்கு இன்னது வேண்டும் என்று குறிப்பினல் அறிந்து, அதனை வழங்குவதே உண்மை யான கொடையாகும். அப்படியின்றி, வருகிறவர்கள் வாய்விட்டுக் கேட்க, அதன் பிறகு நான் கொடுக் கிறேனே, அது உயர்ந்த கொடையாகுமா?'குறிப்பறிந் தீதலே கொடை என்று சொல்வார்கள் அல்லவா?”

தொண்டை நாட்டில் காஞ்சீபுரத்துக்குத் தெற்கே பத்து மைலில் உள்ள மாகறல் என்ற ஊரில் இருந்த புண்ணியகோடி என்னும் பெயரை உடைய வேளாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/88&oldid=584051" இலிருந்து மீள்விக்கப்பட்டது