பக்கம்:நல்ல சேனாபதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நல்ல சேனபதி

குலச் செல்வர் அவர். பெற்ற செல்வத்தைப் பிறருக்கு வழங்கி அவர்கள் பெறும் இன்பத்தைக் கண்டு மகிழ் வதே வாழ்க்கையில் சிறந்த இன்பம் என்று எண்ணி வாழ்பவர். அவரிடம் பலவகையான மக்கள் வருவார்கள். தொழிலாளிகள் வருவார்கள்; வேளாளர் வருவர்; அந்த னர் வருவர்; புலவர்கள் வருவார்கள். அவரவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து, விருந் துணவு வழங்கிச் சில நாள் இருக்கச் செய்து விடை தருவது புண்ணியகோடியின் வழக்கம்.

இறைவன் திருவருளால் அவருடைய செல்வம் பெருகியது. அவருடைய நிலங்கள் நன்கு விளைந்தன. அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய அறச் செயல்கள் வளர்ந்தன.

தம்மை அண்டி வந்தவர்களுக்குப் பசியாற உணவு வழங்குவதே பெரிய அறம். ஆனல், புண்ணிய கோடிக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஒரு Gమిడిr+ சோறு போட்டால் அப்போதைக்கு உண்ப வர்கள் வயிறு நிரம்பிவிடும். ஆனல், அவரவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ வகையான இன்னல்கள் உண்டாகின்றன. ஒரு வேளை உணவு உண்டு வயிறு நிரம்புவதல்ை அந்த இன்னல்கள். நீங்கி விடுவதில்லை. சிலருக்கு வாழ வீடு இல்லாமல் திண்டாடலாம். சிலர் திருமணம் செய்துகொள்ள வழியில்லாமல் வாடலாம். இன்னும் சிலர் வீட்டில் குழந்தைக்குப் பால் தரும் பசு இல்லாமல் குறையுறலாம். இப்படி மனிதர்களுக்கு உள்ள குறைகள் பல. அவற்றைக் கூடிய வரையில் கேட்க முடிந்தால், அதுவே பெரிய பாக்கியம் என்று எண்ணிஞர். இறைவி காஞ்சீபுரத்தில் முப்பத்திரண்டு வகையான அறங்களைச் செய்தாள். அவற்றில் ஒன்று தானே அன்னதானம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/89&oldid=584052" இலிருந்து மீள்விக்கப்பட்டது