பக்கம்:நல்ல சேனாபதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் பரப்பின வள்ளல் 81

இத்தகைய எண்ணமுடையவ ராதலின் அந்த உபகர்ரி தம்பால் யாரேனும் வந்தால் அவருடைய பசியை ஆற்றி அவருடைய குடும்ப் நலனைப்ப்ற்றி விசாரிப்பார். அவருக்கு ஏதேனும் குறை உண்டர் என்பதை அந்தப் பேச்சிலிருந்து தெரிந்துகொள்வார்: உடனே அந்தக் குறையை நிறைவேற்றுவார். அவரு டைய இயல்பை அறிந்த பலர், தமக்கு இன்னது வேண்டுமென்று கேட்பதற்குத் தயங்குவதில்லை.

ஒரு நாள் யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து மாகற லுக்கு வந்தார். புண்ணியகோடி என்னும் தர்மவான் அவ்வூரில் இருப்பதை நாடியே வந்தார். அவ்வூர் எங்கே இருக்கிறதென்று வழி கேட்டு வந்துவிட்டார். ஊருக்குள் வந்தவர் வள்ளலின் வீட்டையும் அடை யாளம் கேட்டுத் தெரிந்து கொண்டார், அந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டபோது, அவர் கால் எழவில்லை. ஏதோ வருத்தம் அவர் உள்ளத்தில் இருந்ததென்று. தெரிந்தது. முகத்தில் பொலிவில்லை. நடந்துகொண்டே இருந்தவர், திடீரென்று நின்ருர் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். மறுபடியும் அந்த வழியே திரும் பிப் போய்விடலாம் என்று அவர் நினைத்தார் போலும்!

மறுபடியும் நாலு அடி எடுத்து வைத்தார். அவ ருக்கு மேலே நடக்க ஊக்கம் உண்டாகவில்லை. சிறிது நேரம் நின்ருர். மீண்டும் நடந்தார். எப்படியோ புண்ணியகோடியின் வீட்டுக்குப் போய்விட்டார். அவி ரைக் கண்டவுட்ன் அந்தச் செல்வர் "வர்.வேற்று உபசரித்தார். வந்தவர் அதிகமாகப் பேசவில்லை. ஏதோ அரைகுறை மனத்தோடு உபசாரங்களை ஏற்றுக் கொண்டார்.

அவர் மிகவும் வாட்டமுற்றிருப்பதை அறிந்து புண்ணியகோடி, 'உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்

- - 6اسديني

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/90&oldid=584053" இலிருந்து மீள்விக்கப்பட்டது