பக்கம்:நல்ல சேனாபதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நல்ல சேனபதி

கிறதுபோலத் தோன்றுகிறது. ஏதாவது இல்லாத குறையாஞ்ல் தெரிவியுங்கள். நான் அதைப் போக்க முயலுகிறேன்” என்ருர். வந்தவர், "ஒன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆனல், அவர் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. புண்ணியகோடி உபசரித்து உணவு வழங்கினர். மிகவும் நாணத்தோடு அந்த உணவை உட்கொண்டார் வந்தவர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் விருந்துண்டார்கள். அவர் மாத்திரம் யாரோடும் பேசவில்லை. எதையோ இழந்து விட்டவர்போல இருந்தார். - -

விருந்து உண்டவுடனேயே அவர் வள்ளலிடம் விடை பெற்றுக்கொண்டார். அவர் புறப்படும்போது புண்ணியகோடி, 'உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா? என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். இங்கே சாப்பிட்டதே போதும்!” என்று. சொல்லிப் புறப்பட்டு விட்டார். சோழநாட்டில் உள்ள ஓர் ஊரை அவர் தம் முடைய ஊரென்று சொன்னர். வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரியாது.

இரண்டு நாட்கள் சென்றன. ஒரு புலவர் புண்ணிய கோடியை நாடி வந்தார். அவர் பலமுறை வள்ளலிடம் வந்து பழகியவர். வள்ளலுடைய ஈகைச் சிறப்பை வாய் கொண்டமட்டும் போகிற இடங்களில் எடுத்துரைப் பவர். அவர் மாகறலுக்கு வந்து புண்ணியகோடியைக் கண்டார்; கண்டவுடன், "இரண்டு நாட்களுக்குமுன் சோழநாட்டில் இன்ன ஊரிலிருந்து ஒருவர் இங்கே வந்தாரா?' என்று கேட்டார்.

வள்ளல், "ஆம், வந்தார்; எப்போதும் வாடிய முகத்

தோடு இருந்தார் என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/91&oldid=584054" இலிருந்து மீள்விக்கப்பட்டது