பக்கம்:நல்ல சேனாபதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணல் பரப்பின வள்ளல் 87

"நேரே ஒரு பொருள் வேண்டுமென்று கேட்க நானுகிறவர்கள், தமக்கு வேண்டியதை இந்த மணலில் எழுதினால், நான் அதை அறிந்து வேண்டியதை வழங்குவேன். மானம் உள்ளவர்கள் வாய் திறந்து, 'ஈ' என்று சொல்ல மாட்டார்கள். ஆனலும், அவர் களுக்குக் குறைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டுமானுல், அவர்கள் நாணம் அடையாத வழியில், நாம் அவர்கள் குறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த முறையை மேற் கொண்டேன். என்னைப் பாராமலே தங்களுக்கு வேண்டியதை மணலில் அவர்கள் எழுதி விடலாம். நான் அதைப் பார்த்து வேண்டியதை வழங் குவது எளிது. இந்த ஏற்பாடு எப்படி?” -

புலவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பிறருடைய உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியை அவர் எவ்வளவு நுட்பமாகக் கவனிக்கிருர் என்று எண்ணி எண்ணி வியந்தார். இப்படி யெல்லாம் செய்து பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற நீங்கள் மனிதர் அல்ல; தெய்வமே!” என்று பாராட் டிர்ை. .*

அதுமுதல் புண்ணியகோடியிடம் வருபவர்கள் யாவரும் தமக்கு வேண்டியதை அந்த மணலில் எழுதித் தெரிவிக்கலானர்கள். யாரும் செய்யாத இந்த முறை யைப் புலவர் உலகமும் புரவலர் உலகமும் வியந்து பாராட்டியது. -

45TಾಗಿuಡಿಹTq. பிறர் மானத்தை உணர்ந்து இவ் வாறு ஒரு வழி செய்ததைப் பாராட்டும் பழம்பாட்டு ஒன்று உண்டு. அது வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/96&oldid=584059" இலிருந்து மீள்விக்கப்பட்டது