பக்கம்:நல்ல தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. யாப்பின் அமைதி இறையனார் அகப்பொருள் தோன்றிய வரலாற்றைப் பற்றிய கதை நாடறிந்தது, பாண்டி நாட்டில் வாழ்ந்த புலவர் பலர் பஞ்சத்தால் பல காலம் வெளியே சென்றனராம். பின்பு நல்ல மழை பெய்ய, அவர்களுள் பலர் திரும்பி வந்தன ராம். அவர்களுள் எழுத்தும் சொல்லும் அறிந்தவரே இருந் தனராம்; பொருள் அதிகாரம் அறிந்தவர் இல்லையாம். உடனே பாண்டியன் கவன்றானாம். எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளின் பொருட்டன்றே? என்று கூறி, பொருளதிகாரம் வல்லாரைத் தேடிக் கொண்டு வருமாறு நாட்ெங்கும் ஆட்களை அனுப்பினானாம். அம்முயற்சி பயன்பெறவில்லை. அவன் மிகவும் வருந்தினான். அவ் வாட்ட நிலை கண்டு இறைன்ை இறையனார் அகப்பொருள் சூத்திரங்களைச் செய்து உதவினான். இதுதான் வரலாறு. இது நடந்த கதையா அன்றிக் கற்பனையா என்னும் ஆராய்ச்சி நமக்கு வேண்டா. இதன் அடிப்படையை எண்ணிப் பார்க்கவேண்டும். எந்த மொழியிலும் எழுத்தும் சொல்லும் அறிதல் அவற்றால் பொருளை விளக்குவதற்குத்தானே? எனவே, பொருள் இன்றேல், எழுத்தாலும் சொல்லாலும் என்ன பயன்? ஆனால், பொருள்கள் உலகில் உள்ளனவே! இலக்கண மெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்குந்தானே?’ எனச் சிலர் கேட்கலாம். அக்கேள்வி தமிழ் இலக்கணம் அறியாதவரா லேயே கேட்கப்படும். பிற மொழிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு, தமிழ் மொழிக்கு உண்டு என்றால், அது 'பொருள திகாரம் பெற்ற பெருஞ்சிறப்பேயா மெனலாம். எழுத்தை யும் சொல்லையும் தெளிந்த இலக்கண முறைப்படி விளக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/114&oldid=775024" இலிருந்து மீள்விக்கப்பட்டது