பக்கம்:நல்ல தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பின் அமைதி 1 | 1 தோடு பிற மொழியாளர் அமைவர். ஆனால், தமிழ் இலக் கணத்தில், இவை இரண்டும் பொருளை ஆராயவல்லவா என எண்ணிப் பொருளை விளக்கி வருவதே பொருள்தி காரம். அதை உரைநடையாலும் பாட்டாலும் விளக்கி னார்கள். உரை நடை இலக்கண அமைப்புக்களைப்பற்றி முன்னமே பல அறிவித்துள்ளேன். பாட்டின் இயல்பின்ை விளக்குவது யாப்பு. அப்பாட்டின் அழகின் பண்பை விளக்கு வது அணி. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள், என்னும் மூன்று அதிகாரங்கள் இருந்தாலும், பொருளதி காரத்தில் செய்யுள் இயலால் யாப்பையும், உவம இய் லால்? அணியையும் ஆசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். இது வரை எழுத்தையும் சொல்லையும் பற்றி ஒரளவு கண்ட நாம்; மற்றவற்றையும் சுருக்கமாகக் கண்டு அமைவோம். அவை பற்றியும் அறிந்த பிறகுதான் நல்ல தமிழ் கண்ட நிலையை எய்துவோம் என்ற காரணத்தால் அவற்றையும் அறிவோம். பிற மொழிகளுள் பொருள் பற்றிப் பேசவில்லை. தமிழில் மிகுபழங்காலம் தொட்டே இப்பொருள் பற்றி வரை யறை செய்துள்ளனர். உலகில் மக்களுக்குத் தேவைப்படு கின்ற பொருள்களனைத்தையும் ஆராய்ந்து அவற்றை இரண்டு வகையிலே அடக்கினார்கள்; அவை அகப்பொருள், புறப்பொருள், என்பன. உலகில் ஒத்த அன்ப்ால் ஒருவனும் ஒருத்தியும் உள்ளத்தால் கலந்து கண்டு பெற்ற-பிறருக்கு இன்னதென எடுத்துக் காட்ட இயலாத நிலையிலுள்ளஇன்பத்தை அகம் என்றும், மற்ற அனைத்தையும் புறம் என்றும் கூறி ைைத்தார்கள் சிலர் இவற்றை 'அறம் பொருள் இன்பம் வீடு' என நான்காகப் பகுப்பர். இன்பம்’ ஒன்றுமே அகமாகவும், மற்ற மூன்றும் புறமாகவும் அமையும். தமிழில் இந்த இரு பொருள் பற்றியே எல்லா இலக்கியங் களும் அன்று தொட்டு இன்று வரை அமைகின்றன. தமிழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/115&oldid=775026" இலிருந்து மீள்விக்கப்பட்டது