பக்கம்:நல்ல தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நல்ல தமிழ் மட்டுமின்றி, வேறு எந்த மொழியிலாயினும் ஆராய்ந்து பார்த்தால், எல்லாப் பொருள்களும் இந்த இரண்டிலேயே அடங்கும் என்பது நன்குவிளங்கும். இந்த இருபொருள்பற்றிப் பாடும் பல பாடல்களுக்கு இலக்கணமும் சொல்லாட்சியும், மரபும், மெய்ப்பாடும், யாப்பும், அணியும் விளக்கிக் காட்டும் இயல்களை உடையதே பொருளதிகாரம். தமிழ் இலக்கியங்களுள் பல பழங்காலத்தில் அகப் பொருள் பற்றியே அமைந்துள்ளன. சங்க கால எட்டுத் தொகை நூலுள் ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியன வேயாம். பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியவை. இந்தப் புறப்பொருட்பாக்களின் அடிப்படை யிலேதான் தமிழ் நாட்டுப் பழங்கால வரலாறே அறுதியிடப் பெறுகின்றது. அகப்பொருட் பாடல்களால் தமிழர்தம் பண் பாடு, நாகரிகம், சமயம், வாழ்வியல் போன்ற பலவற்றின் உண்மைகளையும் தன்மைகளையும் அறிந்துகொள்ள இய லும். இன்று தமிழ் நாட்டில் அவை பற்றிப் பல அறிஞர் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிடுகின்ற னர். அவற்றின் அடிப்படையிலே கட்டுரைகள், கதைகள், கவிதைகள் புதுப்புது வகையில் வெளிவந்து கொண்டேயிருக் கின்றன. எனவே, இங்கு நானும் அவை பற்றி அதிகம் எழுதத் தேவை இல்லை. பொருளின் நிலையை விளக்கும் tpJL{ முத்லியவை பற்றி ஒரளவு முன்னமே கண்டுள்ளோம். பொருளதிகாரம் இன்றேல் பிறவற்றால் பயன் இல்லை என்னும் ஓர் உண்மையை மட்டும் அறிந்து, அதை உணர்ந்து, அன்றே அதற்கு இலக்கண வரம்பமைத்த தொல்காப்பியர்ைப் போற்றி மேலே செல்லலாம். யாப்பும் அணியும் நல்ல தமிழுக்கு உதவும் நெறி கண்டு அமைதல் சாலச்சிறந்தது. தமிழில் மிகு பழங்காலந்தொட்டே உரையும் பாட்டும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. தொல்காப்பியத்திலும் இரண்டும் குறிப்பிடப்படுகின்றன. உரையும் பாட்டும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/116&oldid=775028" இலிருந்து மீள்விக்கப்பட்டது