பக்கம்:நல்ல தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பின் அமைதி 113 பயின்று வரும் வழக்கு, பிந்திய இலக்கிய இலக்கண நூல் களிலும் பேசப் பெறுகின்றது. எனினும், உரைநடைக்குத் தனியாக இலக்கணம் வகுக்கவில்லை என்பர் சிலர். நாம் இது வரையில் கண்ட வாக்கியம் அல்லது சொற்றொடரின் அமைப்புகளெல்லாம் உரைநடை இலக்கணம் பற்றியவை களே. இரண்டொரு விகார அமைதிகள் தவிர்த்து மற்றவை அனைத்தும் உரைநடைக்கு அமைந்தனவே. உரைநடை அல்லது வசனம் எப்படி எழுத வேண்டும் என்பதைத்தான் சொற்றொடர் இலக்கணம் விளக்குகிறது. அதற்குரிய நிறுத்துக் குறிகளும், பொருள் மாறுபடாத சொற்றொடர் அமைப்புகளும் எவ்வாறு தமிழில் அமையும் என்னும் இலக் கணங்களையெல்லாம் கண்டோம். எனவே, தமிழ் உரை நடைக்கு - நல்ல தமிழுக்கு - அவைகளே இலக்கண வரம்பு கள் எனக்கூறி, இனிச் செய்யுள் நடைக்குரிய இலக்கணங்கள் சில கண்டு அமைவோம். இன்று நாட்டில் எத்தனையோ வகையில் புதுப் புதுப் பாடல்கள் உண்டாகிக்கொண்டே வருகின்றன. அவை அத்தனையும் சரியானவை என்றோ இலக்கண அமைதி உடையன என்றோ கூற இயலாது. என்றாலும், பலரும்இலக்கணம் அறியாதவர்களுங்கூடப்-பலப்பல பாடல்களை இயற்றுகின்றனர். சில நன்கு இனிய ஓசையுடையனவாய் அமைகின்றன. சில கெடுகின்றன. யாப்பிலக்கணம் பயின்று, அதன் வழிப் பாட்டிசைத்தல் அவ்வளவு எளிதன்று. அதைக் கருதித்தான் போலும் புலவர் ஒருவர், காரிகை கற்றுக் கவிபா டுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது கன்றே.” எனப் பாடி வைத்த்னர்! கவி, உள்ளக் கிளர்ச்சியால் ஊற் றெடுத்து ஓடி வருவது. என்றாலும், அதுவும் இலக்கண் வரம்பிற்கு உட்பட்டு அமைய வேண்டும் என்பது அறிஞர் கொள்கை. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/117&oldid=775030" இலிருந்து மீள்விக்கப்பட்டது