பக்கம்:நல்ல தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நல்ல தமிழ் \. தொல்காப்பியர் தம் செய்யுளியலுக்கும் பின் வந்த யாப் பிலக்கணங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. தொல் காப்பிய எழுத்ததிகாரச் சொல்லதிகாரங்களுக்கும் சில வேறு பாடுகள் உள்ளன என்பதை முன்னமே காட்டியுள்ளேன். அப்படியே யாப்பிலக்கணத்திலும் அணியிலக்கணத்திலும் சிலவேறுபாடுகள் உள்ளமை காணலாம். இவற்றின் அடிப் படை காலந்தோறும்உண்டாகும் புதுப்புது இலக்கியங்களுக்கு ஏற்ப மாறாவிட்டாலும், இவற்றின் அமைப்புகளும், முறை களும், எடுத்துக் காட்டுகளும், பிற இயல்புகளும் காலந் தொறும் மாற்றம் பெறுவதைக் காண்கின்றோம். சங்க காலத்திலோ, அதற்கு முன்போ எழுந்த பாடல் களுக்கும், இடைக் காலத்தில் எழுந்த பாடல்களுக்கும், இன்று எழும் பாடல்களுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. சங்ககாலப் பாடல்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்வின் அடிப்படையை விளக்குவனவாய், வெறுஞ்சொல் லடுக்குகளாய் இல்லாமல், பொருள் பொதிந்த பெட்டகங் களாய் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுள் எதுகை மோனையை எதிர்பார்த்தால் ஏமாற்றமே உண்டாக்கும். வெறுஞ்சொல்லழகு கருதிப் பொருளைப் புறக்கணிப்பவர் பழங்காலத் தமிழர் அல்லர். டாக்டர். சாமிநாத ஐயர் அவர்கள் தம் வரலாற்றிலே திருக்குறளை எதுகைமோனை நயத்துக்காகத் திருத்திய துரைமகனார் தம் ஆசிரியரிடம் பட்ட பாட்டை நன்கு விளக்குகிறார். தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். என்ற குறளின் இரண்டாமடியில் 'எச்சம்’ என்பதற்குப் பதில் 'மக்கள்' என்று சொல்லழகுக்காக எழுதுவது எவ்வளவு பொருள்கெடக் காரணமாகின்றது! எனவே, பழங்காலத்தில் வெறுஞ்சொற்கோவைகளாக அமையாது, அறிஞர் கவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/118&oldid=775032" இலிருந்து மீள்விக்கப்பட்டது