பக்கம்:நல்ல தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பின் அமைதி 115 களைப் பொருட்செறிவுடையனவாகவே அமைத்தனர். அதனால், அக்காலத்தில் அதிக இலக்கண மரபு யாப்பில் உண்டாகவில்லை. மற்றும் அக்காலத்தில் நால்வகைப் பாக்கள் மட்டும் இருந்தன என்பதை அறிகிறோம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பனவே அவை, அவற்றுள்ளும் நாம் காணும் எல்லாச் சங்க நூல்களிலும் ஆசிரியப்பாடுது அதிக மாகப் பயின்று வருவதை அறிகிறோம். வெண்பா ஒரோ விடங்களில் வருகின்றது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது. வஞ்சி அடிகளும் ஒரு சில பாக்களில் வரக் கான் கிறோம். பெரும்பான்மையாக வழக்கத்தில் ஆசிரியப்பா உள்ளமைக்குக் காரணம் என்ன? மொழி. மக்களுக்குக் கருத்தை விளக்குவதற்காக அமைந்ததே என்ற காரணத் தால், தாம் பாட்டிடைக் கூறும் பொருளை அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வினால் அறிஞர் அன்று பாட்டிசைத்தனர். எனவே, அவற்றின் பொருள்களை எளிமையாக உணர்ந்துகொள்ள முடிகின்றது. அவற்றுள் பத்துப்பாட்டுப்போன்ற நூறு அடிகளுக்கும் மேலே யுள்ள பாட்டுக்களுக்கு உரைகாணும் நச்சினார்க்கினியர் போன்ற இடைக்கால உரையாசிரியர்கள் எப்படி எப்படியேர் கூட்டியும் மாற்றியும் உரைகண்டு, பாடலைக் கடுமையாக்கு கின்றார்கள். குறள் உட்படப் பல பாடல்களை உரைகள் இல்லாமலே நம்மால் நன்கு அறிந்து கொள்ள இயலும். சில பாடல்களை உரைகளே குழப்பிப் பொருள் விளங்கவொட டாமல் தடை செய்கின்றன. எனவே, ஆழ்ந்து பார்ப்பின், சங்க காலப் புலவரது எளிய நடையும் பொருள் அமைப்பும் நன்கு விளங்கும் என்பது வெள்ளிடை மலை. இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் பல ஆயிரக்கணக் கான பாடல்களைப் பாடியுள்ளனர். "அம்’ என்றால் ஆயிரம் பாட்டு’ என்று பல பாடல்களைப் பாடுவதைப் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/119&oldid=775034" இலிருந்து மீள்விக்கப்பட்டது