பக்கம்:நல்ல தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கல்ல தமிழ் மையாகக்கொண்டனர். ஆனால், அந்த ஆயிரம் பாட்டுள் ஒன்றாயினும் பொருள் செறிவு உடையதாய் இருக்கிறதா? அது மட்டுமன்றிப் பொருள் எக்காலத்துக்கும் ஏற்புடைய மக்கள் வாழ்வொடு பிணைந்ததாக அமையவேண்டும் வாழ் வுக்குத் தேவையற்ற பொருள்களைப்பற்றி எத்தனைக் கற்பனை நலம் தோன்றப் பாடினும் அவை காலமென்னும் கடும் புனலை நீந்தி வாழ முடியாது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு காட்டுகின்றது. எனவே, பாட்டின் இலக்கண அமைதியைக் காட்டிலும் பொருள் அமைதியே நல்ல தமிழுக்கு ஏற்றது. - பெரும்பாலும் பழங்காலப் பாடல்கள் (உரையாசிரியர் குறுக்கீடு இல்லாதிருந்தால்) நேர்முகமாகப் பொருள் தருவன வாகவே உள்ளன. இடைக்காலத்தில் தேவை இல்லாத சொற்களை ஆண்டு, பொருள் முட்டுப்பாடுறப் பாட்டுகள் எழுதிய காரணத்தினாலே அவற்றின் பொருள்களைக் காண இல்க்கணம் வேறு வகுக்கவேண்டிய தேவை உண்டாயிற்று. அவற்றை நன்னூலும், யாப்பிலக்கணமும் பலவகையில் அன்மத்துக் காட்டுகின்றன. யாற்று நீர்ப் பொருள்கோள் முதல் அடி மாறி மாற்றுப் பொருள்கோள் வரையில் எட்டு வகையாக நன்னூல் அமைத்துக்காட்டுகின்றது. அவற்றின் விள்க்கமெல்லாம் நமக்குத் தேவையில்லை. எனவே, யாற்றுர்ே மொழிமாற்று நிரனிறைவிற்பூண் தாப்பிசை அளைமறி, பாப்புக் கொண்டுகூட்டு அடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே', என்ற நன்னூல் சூத்திரம் (41 1) காட்டி அமைகின்றேன். இனி, இந்த யாப்பிலக்கணத்திலே எழுத்திலக்கணத்தில் கண்ட அத்தனை எழுத்துக்களும் இடம் பெறுகின்றன. பாட்டுக்கு அடிபடை எழுத்துக்கள் அல்லவா? எழுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/120&oldid=775037" இலிருந்து மீள்விக்கப்பட்டது