பக்கம்:நல்ல தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பின் அமைதி 1 17 சொல், சொற்றொடர், என்று உரைநடைக்கு உள்ளவை போல யாப்புக்கு எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை பாட்டு என்ற பிரிவுகள் உள்ளன. எழுத்தால் ஆகிய அசையில், நேரசை, நிரையசை என்ற பிரிவுகள் உள்ளன. அந்த அசைகள் ஒன்றோ பலவோ பாட்டுக்குப் பொருத்தமாய் அமைவது சீர். இரண்டு சீர்கள் இணைவது தளை. தளைகள் உண்டாக்குவது அடி. அடிகளை இணைப்பது தொடை. இவற்றால் அமைவது பாட்டு. இப்படி யாப்பிலக்கண அமைதி அமைகின்றது. இந்த யாப்பிலக்கண அமைதிகள் யாவும் யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் என்ற பிற் காலத்து நூல்களிலெல்லாம் விளக்கப் பெற்றுள்ளன. தொல், காப்பியச் செய்யுள் இயலிலும் இவற்றின் விளக்கங்கள் உள்ளன. எனினும், பிற்காலத்தில் உண்டான-இன்று. நாட்டில் அதிகமாக உலவுகின்ற வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பாக்களுக்குரிய இனங்களாகிய விருத்தப் பாக்கள். பண்டு நாட்டில் இல்லாதவை. விருத்தமென்னும் ஒண்பா' என்ற சிறப்பு பிற்காலத்தில் உண்டானதே. அன்று நால்வகைப் பாவொடு சில சில விகற்பப்பட்ட இரண்டொரு பா வகைகளே காட்டப் பெறுகின்றன. அவை பரிபாடல் மருட்பாப் போன்றவை. யாப்பு என்பதற்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர். எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்ப்ென மொழிப யாப்பறி புலவர். (பொருள்.384) என்று சொல்லி அக்கருத்தையும் தாம் கூறியதாகக் காட் டாது, அத்துறையில் வல்ல புலவர் தம் உள்ளக்கிட்க்கை அது எனக் காட்டுகின்றார். மற்றும் பிற்காலத்து யாப்பிலக்கண நூல்கள் போலன்றி, தொல்காப்பியர் வெறும் பாட்டு ஆக்கும் உறுப்புக்களைப் பற்றியும், அவற்றின் விசுற்பங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/121&oldid=775038" இலிருந்து மீள்விக்கப்பட்டது