பக்கம்:நல்ல தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 -اسبا நல்ல தமிழ் * களைப் பற்றியும் மட்டுமே கூறாது , அப்பாடல்கள் காட்டும் பொருள் அமைதியையே அதிகமாக விளக்குகிறார். அப் பாட்டுக்கள் அகப்பொருள் புறப்பொருள் என்னும் இரு வகைப் பொருள்களிடத்தும் எவ்வெவ்வகையில் எவ்வெம் முறையில் எடுத்தாளப் பெறும் என்பதைக் காட்டுகின்றார். ஆனால், பின்னர் யாப்பின் திறம் பாட வந்த புலவர்கள், அந்த யாப்பின் உறுப்புக்களைத் தனியாகக் காட்டி உறுப் பியலாகவும், பின்னர்ப் பல்வேறு வகைப்பட்ட பாக்களைக் காட்டிச் செய்யுள் இயலாகவும், இவ்விரண்டினையும் சார்ந்த பிறவற்றைக் காட்டி ஒழிபியலாகவும் செய்துள்ளார் கள். அஃது அவர்கள் குறையன்று. அக்காலத்தில் நாட்டிற் பாக்கள் அத்துணை விரிந்த அளவில் வழங்கியமையும், அவற் றின் விகற்பங்கள் எண்ணிறந்துநின்றமையுமே.காரணங்களாக லாம். எனினும், அவையெல்லாம் காலப் போக்கில் வாழ் விழந்து மறைய, பழைய ஆசிரியப்பாவே மீண்டும் தழைத்து வருவதைக் காண்கின்றோ மல்லவோ! சிலப்பதிகாரம் சிறந்த நாடக நூல். அதற்குப் பிறகு நாம் மனோன்மணியம் பெற்றுள்ளோம். இரண்டும் பெரும்பாலும் ஆசிரியப்பா வால் ஆக்கப் பெற்றனவே. ஆசிரியப்பா எழுவதற்கு எளிமை என்பது மட்டுமின்றி, அதனால் மற்றவர்க்கு எளிமையாகப் பொருளை விளக்கவும் முடியும் என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டும். முன் உரைநடைக்கு எழுதிய அமைதி பாட்டுக் கும்-செய்யுளுக்கும்-பொருந்துவதாகும். தன்னை உயர்ந்த புலவன் எனப் பிறர் மதித்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, விளங்காத சொற்களையும் சொல் அமைப்புகளை யும் யாப்பு முறைகளையும் அமைத்து ஒரு புலவன் பாட்டுப் பாடுவானானால் அஃது அவன் காலத்திலேயே தன் முடிவைத் தேடிக்கொள்ளும். ஆனால், அதே வேளையில் சந்தமும் அமைப்பும் அற்று, சொற்களை அடுக்கித் தானும் புலவன் என்று காட்டிக்கொள்ளப் பொருட்டெளிவற்ற பாடல்களை-இக்காலத்தில் சிலர் பாடுவது போன்றுபாடுவதாலும் பயனில்லை. அந்தப் பாடல்களும் நிலைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/122&oldid=775039" இலிருந்து மீள்விக்கப்பட்டது