பக்கம்:நல்ல தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பின் அமைதி 1 19 வாழா! எனவே, செய்யப்படுவது செய்யுள் ஆதலால், அதைச் செய்யும் திறனை முதலில் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு இலக்கணம் கற்க வேண்டும் என்பதில்லை. பழங்காலப் புலவர் தம் பாடல்களை முறையாகப் பயில்வதே போதும். அந்தப் பாடல்களின் அடிப்படையில், சொல்லின் பமும் இன்னோசையும் தழுவியதாய், எடுத்த பொருளை விளக்கும் தன்மை வாய்ந்ததாயமையச் செய்யவேண்டும். அச்செய்யுள் காட்டும் பொருள் அந்த நிலத்து மக்களின் வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் பண்புக்கும் பற்றுக்கும் ஏற்ற தாக அமையவேண்டும். அத்தகைய செய்யுளை இயற்றி னால், அஃது அப்புலவனை நெடுங்காலம் வாழவைக்கும். அவன் உடலும் உயிரும் - ஏன் - சிலர் பெயரும் - கெட்டா லும், தான் கெடாது, தன்னைப் பாடியவனை வாழவைக் கும் என்பது உறுதி. கம்பரும், வள்ளுவரும், இளங்கோவும், திருத்தக்க தேவரும், தேய்புரிப் பழங்கயிற்றாரும், செம்புலப் பெயல் நீராரும் இன்றளவும் எதனால் வாழ்கின்றார்கள்? அவர்தம் பொருள் பொதிந்த பாடல்களாலன்றோ! அத்த கைய பாடல்களைப் பெற்றிருக்கும் காரணத்தாலன்றோ தமிழும் நல்ல தமிழ் என நானிலம் போற்றச் சிறந்து வாழ் கின்றது! எனவே, நம்முள் பாட்டிசைக்க-செய்யுள் யாக்கவிரும்புகின்றவர்களும் பழங்காலப் புலவர்தம் மரபு கெடா வகையில் பொருள் பொதிந்த பாடல்களை இயற்றி, அவற் றால் தாமும் வாழ்ந்து, 'நல்ல தமிழை'யும் வாழவைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். 籌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/123&oldid=775041" இலிருந்து மீள்விக்கப்பட்டது