பக்கம்:நல்ல தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அணியும் தேவை மக்கள் உள்ளக் கருத்தைப் பிறருக்கு உணர்த்தப் பயன் படுவதே மொழி என்பதைக் கண்டோம்; அவ்வாறு உணர்த் துவதில் எளிமையும் உண்டு, உணர்த்த உணரா நிலையும் உண்டு. கண்டவற்றைப் பற்றிப் பேசுவதும் உண்டு காணா தவற்றை விள்க்குவதும் உண்டு. காண்ாதவற்றை விளக்கு வது எப்படி? காணாதவற்றைக் கண்டது கொண்டே விளக்க வேண்டும். எதிரே உள்ள ஒரு பொருளைச் சுட்டிக் காட்டி, "இதோ நீ காணும் இதைப் போன்றேதான், காணாத நெடுந்தொலைவிலுள்ள பொருள் இருக்கும். என்று சொன்னால், காணாத பொருளை ஒருவாறு உண்ர்ந்துகொள்ள முடியும். இந்த முறையைப் பள்ளிக் கூடத் தில் படிக்கும் சிறு பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலேயே சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். உவமானம்' என்றும், உவ ம்ேயம், என்றும் இரண்டைத் தனித்தனியாக விளக்கி, ஒன்றி னால் மற்றொன்று விளக்கப்பெறும் எனக் காட்டுவார்கள். உவ மேயம் காட்டவேண்டிய பொருள்; உவமானம் அதைக் காட் டப் பயன்படுகின்ற பொருள். இவற்றிற்கெல்லாம்,சிறுவர்கள் உள்ம்கொள்ளும் வகையில் ஒளவையார் பாடியுள்ள சில வற்ற்ைமேற்கொள்கள்ாகக் காட்டுவார்கள். சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்:-மாந்தர் குறைக்குங் தனையும் குளிர்கிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்!" இது ஒளவையார் பாட்டு. இதில் நன்மக்கள் இயல் பைக் காட்ட விரும்புகிறார் ஒளவையார். அவர் நல்லவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/124&oldid=775043" இலிருந்து மீள்விக்கப்பட்டது