பக்கம்:நல்ல தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எது நல்ல தமிழ் ? நாட்டு மக்களின் வாழ்வைப் பல வகைகளில் ஆராய் கிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் ஆரா யும் கோணங்களுள் மொழியும் ஒன்று. உலகில் எத்தனை யோ வகையான மொ ழி க ள் வாழ்கின்றன. மனித வரலாற்றில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த மொழிகள் பல. அவை அனைத்தும் இன்று வாழ்கின்றன என்று சொல்ல இயலாது; எத்தனையோ அழிந்துவிட்டன. ஒரு சில பெய ரளவில் வாழ்கின்றன. ஒரு சில வழக்கிழந்துள்ளன. ஒரு சிலவே செம்மொழியாய் வாழ்கின்றன என்னலாம். அவ்ற் றுள் தமிழும் ஒன்று. மொழியே மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு முதலிய அனைத்தையும் உலகுக்குக் காட்டுவதாய் உள்ளது. ஒரு நாட்டில் வாழும் மக்களுடைய மொழியைக் கொண்டே அவர்தம் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடியும். மேலும், மொழியே மக்கள் உள்ளத்தைத் திறந்து காட்டும் கருவி. உள்ளத்தில் எண்ணியதை உதட்டால் உலகுக்கு உணர்த்துவதுதான் மொழி. ஆங்கிலத்தில் இம்மொழி பற்றிப் பல நூல்கள் புதிது புதிதாக வெளிவந்துகொண்டிருக் கின்றன. இன்று உலகில் ப ல் வேறு மொழிகளைப் பற்றி ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்' என்னும் ஆசை வளர்ந்துள்ளது. மொழியே நாட்டின் பழைய கால வரலாற்றைக் காட்டுவதோடு புது உலக வாழ்வுக்கும் வழி அமைக்கின்றது. - இந்த மொழிகளுள்ள்ே. தொன்மை வாய்ந்தன . சில். அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று. பரந்த பாரதத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/13&oldid=775055" இலிருந்து மீள்விக்கப்பட்டது